நேபாளத்துக்கு உதவ தயார் பிரதமர் மோடி உறுதி
புதுடில்லி: நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், சமீபத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. இதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, இடைக்கால அரசின் பிரதமராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி நியமிக்கப்பட்டார். அவரிடம் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அ ப்போது, 'நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்' என்றார்.