உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., அத்துமீறல்: பிரதமர் மோடி தொடர் ஆலோசனை

பாக்., அத்துமீறல்: பிரதமர் மோடி தொடர் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான்இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பொது மக்களை பாதிக்காமல், பாகிஸ்தான் ராணுவத்தை இலக்காக இல்லாமல் பயங்கரவாதிகள் மட்டுமே இந்தியாவின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டனர்.ஆனால், பாகிஸ்தான் நேற்று பொது மக்கள் மற்றும் ராணுவ தளங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி பதற்றத்தை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதிலடி அளிக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.இச்சூழ்நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முப்படை தலைமை தளபதி, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்தும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

முன்னாள் வீரர்களுடன் ஆலோசனை

தற்போதுள்ள சூழ்நிலை குறித்து ஆயுதப்படையை சேர்ந்த முன்னாள்வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், முப்படைகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜெய்சங்கர் சந்திப்பு

தொடர்ந்து இரவில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

krishna
மே 09, 2025 22:15

சூப்பர்யா நீ. முன்னாள் வீரர்களையும் அழைத்து ஆலோசனை பெறுவது. Great thinking and your mindset. need to use their experience. great going. jaihind.


Ramesh Sargam
மே 09, 2025 20:36

ஆக இன்று இரவும் நமக்கு தீபாவளி பண்டிகைதான்.


Karthik
மே 09, 2025 22:45

கவலையே படாதீர்கள்.. நரகாசுரன்களை வதம் செய்து முடிக்கும் வரை இந்திய ராணுவத்தில் தீபாவளி பண்டிகை தொடரும்.. ஜெய் ஜவான்.. ஜெய்ஹிந்த்..


Ramesh Sargam
மே 09, 2025 20:22

இன்று இரவு மூன்றாம் நாள் தீபாவளி பண்டிகை இருக்கா?


Priyan Vadanad
மே 09, 2025 20:09

நமது ராணுவ அதிகாரிகள் சீக்கிரமாகவே பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று மனதார விரும்புகின்ற பலருள் நானும் ஒருவன். நமது பிரதமரின் ஒரு சொல் போதும்.


Priyan Vadanad
மே 09, 2025 20:03

நமது பிரதமருக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தரும்போது, அனைத்து கட்சிகளும் கூட்டபடும்போது பிரதமரும் பங்கேற்கலாமே ஏன் இன்னும் தயக்கம்?


vivek
மே 09, 2025 21:16

அறிவுள்ளவர்கள் கூடும்போது பிரதமர் வருவார்....புரிந்தால் சரி


vivek
மே 09, 2025 21:18

பொறுப்புள்ள எதிர்கட்சி வந்தால் பிர்தமர் வருவார்...நீங்க நீலி கண்ணீர் வடிக்க வேண்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை