வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பத்து வாருங்கள் ஆகி விட்டது இந்திய மக்கள் அனைவரையும் முன்னேற்றிவிட்டு மிருகங்களையும் முன்னேற்ற அக்கறை காட்டுவதில் என்ன வியப்பு
சில தினங்களாக பிரதமர் மோடி செல்லப்பிராணிகள் மீது அதிக அக்கறை கொண்டு வருகிறார்
புதுடில்லி: வன விலங்குகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மத்திய பிரதேசத்தில் 9வது புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புகைப்படங்களை பகிர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t1gt14xs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முயற்சியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றங்களை கண்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 9வது புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அனைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வளர்ச்சிக்கு பாடுபடும் நமது வன அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளுக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது: வனவிலங்கு பிரியர்களுக்கு நல்ல செய்தி. இந்தியா வனவிலங்கை கொண்டாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. வன விலங்குகளைப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் இருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பத்து வாருங்கள் ஆகி விட்டது இந்திய மக்கள் அனைவரையும் முன்னேற்றிவிட்டு மிருகங்களையும் முன்னேற்ற அக்கறை காட்டுவதில் என்ன வியப்பு
சில தினங்களாக பிரதமர் மோடி செல்லப்பிராணிகள் மீது அதிக அக்கறை கொண்டு வருகிறார்