உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடில்லி: டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். அப்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.டில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதியை சந்தித்து மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jx1jdv6j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்து, சுதந்திர தின விழா கொண்டாட்டம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.அதுமட்டுமின்றி ஜனாதிபதியுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளார். இவ்வாறு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அமித்ஷாவும் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ரங்ஸ்
ஆக 03, 2025 22:26

சவால்களை வெல்லுங்கள்.


GMM
ஆக 03, 2025 14:27

மசோதா முடிவிற்கு கால கெடு சட்ட விரோதம். ஆதார் போலிகள். ஆதாரமாக கொள்ள தேர்தல் ஆணையம் மீது வற்புறுத்தல். நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் மீது சுய நடவடிக்கை. உலகில் இல்லாத கொலிஜியம். கேரளா VC தேர்வு மாநில முதல்வர் மற்றும் கவர்னர். இவை அரசியல் சாசன படி இல்லை. அரசியல் பின்புலம். CAG விட்டு தீர்ப்பு, ஜாமின் போன்றவை தணிக்கை செய்து சபையில் விவாதிக்க வேண்டும். தவறை தண்டிக்க விதிகள் வகுக்க வேண்டும். வழக்கில் பல குடும்பங்கள் நிர்மூலம் ஆகிவிட்டன.


GMM
ஆக 03, 2025 14:22

மாநில தேர்தல் ஆணையம் RBI போன்ற பாதுகாப்பில் இருக்க வேண்டும். கள்ள குடியேறிகள் அதிகரிப்பு. பிறப்பில் இந்தியர் என்றால் குடியுரிமை அட்டை. மற்றவர்கள் அகதி. சட்ட நடவடிக்கை பிறந்த நாட்டிடம் இழப்பீடு. கவர்னர், ஜனாதிபதி மக்கள் சேவை அத்தியாவசிய பணி. அதனால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு. அரசியல் சாசன பதவிகள் மீது நீதிபதிகள் அதிகாரம் கூடாது. நீதி அத்தியாவசிய பணி கிடையாது. ஆபத்து நிறைந்த எல்லை. குடிமக்கள் அடையாள 6 எண்ணை பொது வெளியில் மாட்டி வர சட்டம் வேண்டும்.


Anantharaman Srinivasan
ஆக 03, 2025 14:06

எடுப்பார் கை பிள்ளை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை