உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் தலைமையே மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்; மஹா., முதல்வர் பட்னவிஸ் மகிழ்ச்சி

பிரதமர் மோடியின் தலைமையே மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்; மஹா., முதல்வர் பட்னவிஸ் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரதமர் மோடியின் தலைமை, ஜே.பி. நட்டாவின் வழிகாட்டுதலே, உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்தார்.மஹாராஷ்டிரா முழுவதும் 286 நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நடக்கிறது. பாஜ தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மஹாயுதி கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளது. வாக்காளர்களுக்கு நன்றியை மஹாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துக் கொண்டார்.இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜ மீண்டும் முதலிடத்தில் உள்ளது.பிரதமர் மோடியின் தலைமை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஆகியோரின் வழிகாட்டுதலே கட்சியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம். பாஜ மாநிலத் தலைவர் எம்எல்ஏ ரவீந்திர சவான் மற்றும் தொண்டர்களின் அயராத முயற்சியால், பாஜ மீண்டும் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வாக்காளர்களுக்கு மிக்க நன்றி. இவ்வாறு முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 22, 2025 07:12

அப்போ இவரெல்லாம் எதுக்கு?


Ram
டிச 21, 2025 21:56

அடிச்சு தூக்குங்க சார் , இந்தமாதிரி தமிழ்நாட்டிலும் அடுத்தவருடம் நடக்கபோகுது


kjpkh
டிச 21, 2025 21:48

அய்யய்யோ ஓட்ட திருட்டு ஓட்டு திருட்டு ராகுல் அவர்களே வாருங்கள்.


Kuvkuva
டிச 21, 2025 21:30

உண்மை உண்மை உண்மை..


Kuvkuva
டிச 21, 2025 21:29

உண்மை உண்மை உண்மை...


raja
டிச 21, 2025 20:41

வெற்றிக்கு வாழ்த்துக்கள்


RAMESH KUMAR R V
டிச 21, 2025 20:17

எங்கும் தாமரையே மலரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை