உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்

பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'பிரதமர் நரேந்திர மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு காண்பிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நீரஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் கமிஷன், 2016ல் பிறப்பித்த உத்தரவில், '1978ல் பட்டப் படிப்பு முடித்த அனைவரது தகவல்களையும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் டில்லி பல்கலை வழக்கு தொடர்ந்தது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மற்றத் தகவல்களை தருவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், பாதுகாப்பு கருதி பிரதமர் குறித்த தகவல்களை அளிக்க முடியாது' என, டில்லி பல்கலை கூறியது.இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு, 2017ல் தடை விதித்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட மற்ற வழக்குகளிலும் தீர்ப்புகளை ஒத்தி வைத்தது.இந்நிலையில், இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி பல்கலை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதத்தின்போது, டில்லி பல்கலையில், 1978ல் பிரதமர் பி.ஏ., பட்டம் பெற்றார். இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தயாராக உள்ளோம். அதே நேரத்தில் பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்தத் தகவல்களை மற்றவர்களுக்கு தர முடியாது, என, குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Ray
மார் 02, 2025 07:38

உலகப் புகழ்பெற்ற தில்லி பல்கலைக் கழகத்துக்கே இந்த அவமானம் தேவையா? Many famous people have studied at Delhi University, including actors, filmmakers, writers, and business leaders


K V Ramadoss
மார் 01, 2025 06:43

தேவையில்லாத சர்சசை . மோதி அவர்கள் ஒரு திறந்த புத்தகமாகவும் திறமை மிக்க தலைவராகவும் செயல் பட்டு வருகிறார். அவருக்கு பட்டாபி படிப்பு இருக்கிறதா என்று கேட்க வேண்டிய தேவையே இல்லை. அவருக்கு எந்த பல்கலை கழகமும் டாக்டர் பட்டம் வழங்க தயாராக இருக்கும். அவர் அப்படி எல்லாம் ஆசிப் படுபவர் இல்லை. காமராஜர் என்ன படித்தார் என்றோ கருணாநிதி எப்படி டாக்டர் பட்டம் வாங்கினார் என்றோ யாரும் கேட்பதில்லையே


S.V.Srinivasan
பிப் 28, 2025 14:50

அப்படி பார்த்தா மேற்குவங்க அக்கா, தமிழக அப்பா அனைவரது சான்றிதழ்களையும் கேட்கலாமே. இவர்களது கல்வி தகுதி என்னென்னு பொது மக்கள் தெரிஞ்சுக்கலாமே. உடன் பிறப்புகள் நீதி மன்றத்தில் சமர்ப்பிப்பார்களா?


Velan Iyengaar
பிப் 28, 2025 14:10

உலகத்திலேயே " Entire " என்ற வார்த்தையோடு ஒரு டிகிரி சான்றிதழ் எங்கும் கொடுக்கப்பட்டுள்ளதா என்று கற்றறிந்தவர்கள் .... கருத்து கூறலாம் ??


Bye Pass
பிப் 28, 2025 20:35

Velan ஐயங்கார் ஆக இருக்க முடியும்னா இதுவும் சாத்தியம் தான்


Velan Iyengaar
பிப் 28, 2025 12:43

கல்லூரி கால வகுப்பு தோழன் என்று சொல்லிக்கொள்ளவே இயலாத ஒரு படிப்பை அந்த யூனிவர்சிட்டி கண்டுபிடிக்கவேண்டும் ... அதுக்கு காலதாமதம் ஆகுது யுவர் ஆனார்


ஆரூர் ரங்
பிப் 28, 2025 13:15

அஞ்சல் வழியில் படித்ததால் வகுப்புத் தோழர் யாருமில்லை. தபால்காரர் மட்டுமே துணை .


Velan Iyengaar
பிப் 28, 2025 14:06

அஞ்சல்வழி கல்வி .. எவ்ளோ சௌகர்யம் .... ஹா ஹா ஹா ... இப்படி சிரிப்பா சிரிக்குதே ..


Radhakrishnan Seetharaman
பிப் 28, 2025 18:31

வேலா, நீ என்ன தான் கதறினாலும் அவர் தான் உனக்கும் பிரதமர்


Bye Pass
பிப் 28, 2025 23:39

தேவலாம்


ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:37

நேரு பார் அட் லா. அவரது வாரிசுகள் இந்திரா பட்டபடிப்பு இரண்டாமாண்டுடன் நிறுத்தம். ராஜிவ் முதலாண்டு மட்டுமே. சஞ்சய் ஒன்பதாம் வகுப்பு. ஆனா ஒரு வசதி. அப்போதெல்லாம் தேர்தல் மனுவில் கல்வித்தகுதி பற்றி கேட்கும் வழக்கமில்லை. அதனால் வழக்குகளுக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தது.


Velan Iyengaar
பிப் 28, 2025 12:51

இது மாதிரி பழங்கதைகளையே புலம்பிகிட்டு திரியனும் என்று இதன் தலையில் கடவுள் எழுதிவிட்டுட்டான் ....யாரு பெத்த புள்ளயோ ... பரிதாபமா இருக்கு .....


S.V.Srinivasan
பிப் 28, 2025 15:08

ராஹுலு கல்வி தகுதி என்னென்னு தெரியுங்களா ?


ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:31

மூலப்பத்திரம் காண்பிக்கச் சொன்னால் அது தனிப்பட்ட விஷயம்னு பதுங்கல். பிரதமராக கல்வித் தகுதி கட்டாயமில்லை எனும் போது அவருடைய தனிப்பட்ட படிப்பு விஷயத்தை மட்டும் எப்படி கேட்கலாம்?.


Velan Iyengaar
பிப் 28, 2025 12:45

பொய் சொன்ன கேட்கலாம்.. பட்ட மேற்படிப்பு படித்ததாக மக்களை ஏமாற்றினால் கேட்கலாம்..


S.V.Srinivasan
பிப் 28, 2025 15:10

இவனுங்களுக்கு வந்தா ரத்தம். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.


Ray
மார் 02, 2025 07:34

இங்கே குறிப்பிடப் பட்ட எவரும் பீத்திக்கலை. நம்மாளு பீத்திகிட்டதால வந்த வினைதான் சுத்தி அடிக்கிறது. அந்த பட்டம் கொடுத்த பல்கலைக் கழகமே பர்தா போட்டுக்கொள்கிறது. நான் பெரியவன் என்று நினைக்கும்போது நாம் சிறியவராகிப் போகிறோம். நாம் ஒன்றுமில்லை என்றறியும்போது நீங்கள் எல்லையில்லாதவர் ஆகிறீர்கள். ஒரு மனிதராக இருப்பதன் அழகே அதுதான். - சத்குரு ஜக்கி வாசுதேவ்.


ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:26

ஒன்பதாம்ப்பு தாண்டாத கலைஞர் கூட முனைவர் பட்டம் வாங்கினார். காமராஜர் இந்திராவெல்லாம் கேள்வி கேட்கவில்லையே.


Velan Iyengaar
பிப் 28, 2025 11:36

கூமுட்டை.. இவங்க யாரும் தான் படித்ததாக பொய்த்தகவலை தேர்தல் விண்ணப்ப படிவத்தில் கூறவில்லை ....அதை ப்ராமண பத்திரவடிவில் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கவில்லை.. அதிலும் சிலபஸ்சிலேயே இல்லாத பாடத்திட்டத்தை படித்ததாக சொல்லி சிக்கிக்கொள்ளவில்லை. அப்படி படித்ததாக காட்டிய சான்றிதழில் அந்த காலத்தில் இல்லாத எழுத்துருவை உபயோகித்து மாட்டிக் கொள்ளவில்லை ...


Ray
மார் 02, 2025 14:40

கலைஞரை தொட்டுக்கலைன்னா இவனுங்களுக்கு சரிப்படாது. செம அடி போட்டிருக்கார் சபாஷ் கலைஞர் செத்த பின்பும் முப்பத்துநாட்களுக்குமேல் பல துறை பிரபலங்களும் பாராட்டு விழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் உலகில் வேறு யாருக்காவது அப்படியுண்டா? பதில் இருக்கா ரங்கா? IF YOU WOULD NOT BE FORGOTTEN AS SOON AS YOU ARE DEAD, EITHER WRITE SOMETHING WORTH READING OR DO THINGS WORTH WRITING IS IT NOT A FACT THAT HE EXCELLED IN BOTH?


Velan Iyengaar
பிப் 28, 2025 10:23

நீதிபதிக்கு மட்டும் காட்டுவோம் என்று சொல்வதற்கும் சீலிட்ட கவரை நீதிமன்றத்துக்கு சமர்பிப்பதற்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிப்போருக்கு நூறு பொற்காசுகள் கூரியர் செய்யப்படும் ......


Velan Iyengaar
பிப் 28, 2025 10:21

நாட்டு பாதுகாப்பு என்ற முந்தானைக்குள் ஒளிந்துகொள்ளும் அவலத்தை ஒரு நாட்டு பிரதமருக்கு ஏற்படுத்தியவரை மனதார பாராட்டுகிறேன்


புதிய வீடியோ