உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்... நாடு முழுவதும் 1.55 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்

பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்... நாடு முழுவதும் 1.55 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியாக தொடங்கப்பட்ட பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டே, வேலைவாய்ப்பு பற்றாக்குறையை போக்கவில்லை என்பதுதான். இந்த சூழலில், நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், முக்கிய அம்சமாக, தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் முறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது, இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் என்றும், இதன்மூலம், திறமையான இளைஞர்களை கண்டறிந்து, தகுதியான வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 109 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 37 மாநிலங்களில் உள்ள 737 மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தத்திட்டத்தில் எண்ணெய், எரிபொருள், டிராவல், வாகனங்கள், வங்கி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. குறிப்பாக, முன்னணி நிறுவனங்களான எல் அன்ட் டி, முத்தூட் பைனான்ஸ், ரிலையன்ஸ் நிறுவனம், ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ், மாருதி சுசுகி உள்பட 193 நிறுவனங்கள், இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramalingam Narayanasamy
அக் 23, 2024 12:54

அது எதுக்கு.


Sundaram Muthiah
அக் 14, 2024 18:00

தூ. 1.5 லட்சம் பேருக்கு தான் வேலையா. நம்ம மக்கள் தொகை 150 கோடி. என்ன செய்யுறார் டபுள் என்ஜின் சர்க்கார். எல்லாம் வாயில வடை தான்


hari
அக் 14, 2024 18:26

a stupid comment from daily labourer from Singapore


Dharmavaan
அக் 14, 2024 16:27

இதில் திருட முடியாதா என்ன அவலம் மோடிக்கு எதிராக ஏதாவது புரளிகிடைக்குமா


Sivagiri
அக் 14, 2024 13:19

இதெல்லாம் கூட்டாட்சிக்கு எதிரானது - மாநில அரசு ன்னு ஒன்னு இருக்கு , அங்கே கஷ்டப்பட்டு , பொய்யும் புரட்டும் சொல்லி கோடானு கோடி செலவு பண்ணி , ஆட்சியை புடிச்ச கட்சின்னு ஒன்னு இருக்கு , காசை அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா, எங்கள் மாநில இளைஞர்களுக்கு என்ன தேவை என்று எங்களுக்கு தெரியாதா, நாங்க பாக்காத திட்டங்களா? இன்றைய இளைஞர்களை இப்படி எல்லாம் கஷ்டப்ப படுத்தி வேலை வாங்குவது ஒரு அரசாங்கம் செய்ற வேலையா? எதோ பீரு, சரக்கு, அப்டியேயே கொஞ்சம் கஞ்சா, போதை, இலவச சாப்பாடு, ஒண்ணாந்தேதி ஆனா, கொஞ்சம் கையில காசு . . . இப்படித்தான் இளைஞர்களை வழி நடத்துறதுதான் திராவிட மாடல் . .. இதை விட்டு . . . ?


சிவா அரவங்காடு நீலகிரி
அக் 14, 2024 10:57

நாடு முழுவதும் வெற்றி என்று சொல்ல வேண்டும்.. ஐந்து கோடி இளைஞர்கள் வேலை பெற்றனர் என்று சொல்ல வேண்டும். இப்படி பேச பாரத பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் வெட்கப் கின்றனர்... ஆனால் எங்கள் தமிழ் நாட்டில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வார்கள்.......


Siva
அக் 14, 2024 09:29

நல்ல முயற்சி , வாழ்த்துக்கள்