உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2047 க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு: பிரதமர் விருப்பம்

2047 க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு: பிரதமர் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக 2047 க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புகிறேன்,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பேட்டி

ஜெரோதா(Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் 'பாட்காஸ்ட்' டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். இதில் தனது குழந்தை பருவம், கல்வி, அரசியலில் நுழைந்தது, பின்னடைவு, நெருக்கடியை கையாண்டது மற்றும் கொள்கை மேலாண்மை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் பேசி உள்ளார்.

நண்பர்களுடன் சந்திப்பு

இதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இளம் பருவத்தில் எனது குடும்பத்தினரின் ஆடைகளை நான் துவைத்துள்ளேன். இதன் மூலம் குளத்திற்கு செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது.பள்ளியில் படித்த போது, எந்த வகையிலும் நான் கவனம் பெறாத நபராக இருந்தேன். ஆனால், எனது ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தனர்.ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற போது என்னிடம் பலர், ' நீங்கள் குஜராத்தியா? ஹிந்தி எப்படி தெரியும்' எனக் கேட்பார்கள். அதற்கு நான், 'ரயில் நிலையத்தில் விற்பனையாளர்களிடம் பேசி கற்றுக் கொண்டேன்' என பதிலளிப்பேன்.நான் குஜராத் முதல்வரான பிறகு, எனது பழைய நண்பர்களை முதல்வர் இல்லத்திற்கு அழைக்க விரும்பினேன். அதன்படி நானும் அழைத்தேன். ஆனால், அது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அவர்களை நான் நண்பர்களாக பார்க்க எண்ணினேன். ஆனால், அவர்கள் என்னை முதல்வராக பார்த்தனர்.

நானும் மனிதன்

நான் முதல்வராக இருந்த போது, எனது முயற்சியில் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விட மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இரண்டாவதாக, எனக்காக நான் எதையும் செய்ய மாட்டேன் எனவும், மூன்றாவதாக நானும் மனிதன். நானும் தவறு செய்யலாம். ஆனால், தவறான எண்ணத்தில் தவறு செய்ய மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இதனை எனது தாரக மந்திரமாக வைத்துள்ளேன். தவறு செய்வது மனித இயல்பு. நானும் மனிதன் தான். கடவுள் கிடையாது.

சீன அதிபர் விருப்பம்

2014 ல் நான் பிரதமர் ஆன பிறகு உலக தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் என்னுடன் பேசும் போது, இந்தியா வர விரும்புவதாக கூறினார். அதற்கு நான், 'நீங்கள் வரலாம். கட்டாயம் வர வேண்டும்' என்றேன். அதற்கு அவர்,' அவர் நான் குஜராத் வர வேண்டும். உங்கள் கிராமமான வாத் நகர் செல்ல வேண்டும்' எனக்கூறினார். மேலும், அவர் அதற்கு என்ன காரணம் தெரியுமா எனக்கேட்டதுடன், அதற்கான விளக்கத்தையும் அவரே கூறினார். 'உங்களுக்கும் எனக்கும் சிறப்பான உறவு உள்ளது. சீன தத்துவஞானி ஹியுன் சங், உங்கள் கிராமத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்து சீனா திரும்பினார். அவர் எனது கிராமத்தில் வாழ்ந்தார் என்றார்'.

சமூக நீதி

மத்தியில் எனது முதல் ஆட்சி காலத்தில் மக்கள் என்னை புரிந்து கொள்ள முயற்சித்தனர். நான் டில்லியை புரிந்து கொள்ள முயன்றேன். இரண்டாவது ஆட்சி காலத்தில், கடந்த கால கண்ணோட்டத்தில் சிந்தித்தேன். மூன்றாவது ஆட்சி காலத்தில், எனது சிந்தனை மாறி உள்ளது. மன உறுதி உறுதியாக உள்ளது. கனவு அதிகரித்து உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்காக 2047 க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புகிறேன். நாட்டில், உண்மையான சமூக நீதி மற்றும் மத சார்பின்மை உள்ளது.

ரிஸ்க் எடுப்பது முக்கியம்

சந்திரயான் -2 விண்கலம் ஏவுவதை பார்க்க நான் செல்வதை பலர் விரும்பவில்லை. அவர்கள் என்னிடம்,' இது நிச்சயம் இல்லாதது. அனைத்து நாடுகளும் தோல்வியை சந்தித்து உள்ளன. 5 அல்லது 6வது முறை முயற்சிக்கு பிறதே அந்நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. ஏதாவது நடந்தால் என்ன ஆவது' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் அவர்களிடம், 'அதனால் என்ன? தற்போது எனக்கு எந்த பொறுப்பும் கிடையாதா?' எனக்கூறி விட்டு சென்றேன். சந்திரயான் -2 விண்கலம் கடைசி நொடியில் நொறுங்கியது. அங்கு இருந்தவர்கள் அனைவரும் கவலையடைந்தனர். இது குறித்து பிரதமரிடம் தெரிவிக்க யாருக்கும் தைரியம் இல்லை. இது மிகப்பெரிய பின்னடைவு என்பதால், அன்றைய இரவு என்னால் தூங்க முடியவில்லை. இதனால், இந்த திட்டத்தில் உழைத்த விஞ்ஞானிகளை சந்தித்து கலந்துரையாட எண்ணினேன்.தனக்கு ஏற்படும் பின்னடைவை பார்த்து வாழ்க்கை முழுதும் அழும் நபர் நான் அல்ல. மறுநாள் காலை நேரில் சென்று, விஞ்ஞானிகளை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களுக்கு என்னால் முடிந்தளவு நம்பிக்கையை ஏற்படுத்தினேன். சந்திரயான்-3 வெற்றிகரமாக அமைந்தது. அரசியலில் 'ரிஸ்க்' எடுக்க நிறைய முன்னேற்பாடுகள் தேவை. ஒருவர், ஒவ்வொரு தருணமும் ' ரிஸ்க்' எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வீணடிக்க மாட்டேன்

மேலும், ஆன்லைனில் உலா வரும் மீம்களை பார்ப்பீர்களா என கேட்ட கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்: மீம்கள் மற்றும் ஆன்லைன் விவாதங்களை நினைத்து எனது நேரத்தை வீணடிக்க மாட்டேன். நான் உணவுப்பிரியன் கிடையாது. எந்த நாட்டிலும் எனக்கு தரப்படும் உணவை மகிழ்ச்சியாக உண்பேன். உணவுப்பட்டியலை என்னிடம் கொடுத்தால், எந்த உணவை சாப்பிடுவது என முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
ஜன 11, 2025 09:02

நான் கடவுள் ஜீ சொல்றாரு.


Indian
ஜன 11, 2025 06:55

வாயால் வடை சுடுவதில் கில்லாடிகள்


AMLA ASOKAN
ஜன 10, 2025 21:54

2025 இளைஞர்களே காத்திருங்கள் . 2045ல் நீங்கள் முதியவர் ஆனவுடன் வேலை கியாரண்டி . பொறுமை வேண்டும் .


Ramesh Sargam
ஜன 10, 2025 20:10

நமது நாட்டில் உள்ள தேசதுரோகிகள் மனம் திருந்தி, ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்தால் 2047 இல்லை, 2037 -க்குள்ளேயே இந்தியாவில் உள்ள அணைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.


Sivakumar
ஜன 11, 2025 04:49

தங்கள் கருத்துக்கு எதிர்கருத்தை, எதிர் சித்தாந்தம் கொண்ட சக நாட்டுமக்களை தேசத்துரோகிகள்னு சொல்வதைப்போல பிற்போக்கான சிந்தனையும் சர்வாதிகார மனப்போக்குதான். உங்கள் சித்தாந்தம் உங்களுக்கு எவ்வளவு சரி என தோன்றுகிறதோ அதேபோல என்போன்றவர்களுக்கு எங்கள் சித்தாந்தம் ரொம்பவே சரி. உங்களை ஒருபோதும் தேச துரோகி என என்போன்றவர்கள் சொல்லுவதிலேயே சகோ


Duruvesan
ஜன 10, 2025 20:06

முடியாது, தீயமுக விடியல்,உதயா, இனியா அப்புறம் வேற ஏதோ நிதி என இன்னும் பல தொலை முறை தொடரும். பிஜேபி ஆல் ஒரு கூந்தலும் பண்ண முடியாது,


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜன 11, 2025 08:52

உன்னைப் போன்ற கோபாலபுர கொத்தடிமை இருக்கும் வரை திமுக தலைமையின் வாரிசு அரசியல் தொடரும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 10, 2025 19:51

பொறுமையோடு போராடித்தான் முகலாயர்களை விரட்டினோம்.... பொறுமையோடு அஹிம்சை முறையில் போராடித்தான் ஆங்கிலேயர்களை விரட்டினோம்.....பொறுமையோடு போராடித்தான் வளர்ச்சி இந்தியாவை அடையமுடியும்.... அதுவரை மோடிஜி இருப்பாரா அவ்வளவு ஏன் நாம் இருப்போமா ?? ஆனால் பாஜக இருக்கும், அது வெல்லும்.... ஜெய்ஹிந்த்...!!!


J.Isaac
ஜன 10, 2025 19:50

பிரச்சனைகளை தினமலர் பதிவிடவும்


GMM
ஜன 10, 2025 19:09

இந்தியாவில் உண்மையான சமூக நீதி, மத சார்பின்மை இல்லை. இட ஒதுக்கீட்டு கால வரம்பு அவசியம். சாதி, மத சார்ந்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சார்பற்ற முறையில் சட்டம் மாற்ற முடியவில்லை. சலுகை ஆயுளை குறைக்க முடியவில்லை. அனைத்து பிரச்சனைக்கும் மூல காரணம் நீண்டகால பாகுபாடு தீர்வு காண விடாது . அரசின் கடன் . மக்கள் கடன். வசூல் செய்ய முடியா விட்டாலும் , மொத்த கடனை பங்கிட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ஆண்டுக்கு ஒருமுறை சேர்க்க வேண்டும். அவர் தான் குடிமகன்.


Sivakumar
ஜன 10, 2025 18:45

40 தொகுதிகள் கைமாறினதும் நான் biological இல்லைனு சொன்னவர் இப்ப நான் கடவுள் இல்லைனு சொல்லற அளவுக்கு இறங்கியிருக்கார். புடிக்கிறதோ பிடிக்கலையா, நல்ல ஒரு எதிர்க்கட்சியை நிலைநிறுத்துவது ஒவ்வொரு இந்தியனின் கடமை


J.Isaac
ஜன 10, 2025 18:10

2047 ???? யாருக்கு ஞாபகம் இருக்க போகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை