நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை; சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதில் உடனடி கவனம் செலுத்துவேன் என சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றும் கவாய், நாளை (23ம் தேதி) ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்கிறார். இவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியதாவது: 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதில் உடனடி கவனம் செலுத்துவேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நீதிபதிகளை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதை நான் இலக்காகக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்கும் பாடுபடுவேன். இன்று நாடு முழுவதும் மத்தியஸ்தம் பற்றிப் பேசப்படுகிறது. மத்தியஸ்தம் என்பது காலத்தின் தேவை என்று நான் நினைக்கிறேன். மத்தியஸ்தம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். இவ்வாறு சூர்யகாந்த் கூறினார்.நீதிபதி சூர்யகாந்த், நவம்பர் 24ம் தேதி இந்தியாவின் 53 வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார். 2027 பிப்ரவரி 9ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.