உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து ஜாலியாக சுற்றிய சிறை கைதிகள்

போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து ஜாலியாக சுற்றிய சிறை கைதிகள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், மனைவி, தோழியருடன் நேரத்தை செலவிடுவதற்காக, சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து, கைதிகள் வெளியே ஜாலியாக சுற்றித்திரிந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால், கரண் குப்தா உள்ளிட்ட ஐந்து கைதிகளுக்கு, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.பாதுகாப்புக்கு வந்த ஐந்து போலீசாருக்கு, தலா 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்த கைதிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், ஹோட்டல், மதுபான விடுதிகளுக்கு சென்று, மனைவி, தோழியருடன் ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.ஒரேயொரு கைதி மட்டும், மருத்துவமனைக்கு சென்று, சிறைக்கு திரும்பி உள்ளார்.கடந்த 24ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால், கரண் குப்தா ஆகிய நான்கு கைதிகள், மாலையில் சிறைக்கு திரும்பவில்லை.ஒரு கைதி மட்டும் வந்த நிலையில், மற்றவர்கள் வராதது சிறை அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.விசாரணையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஐந்து போலீசார் கைதிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.இதன்படி வழக்குப் பதிந்த போலீசார், லஞ்சம் வாங்கிய ஐந்து போலீசார், நான்கு கைதிகள், அவர்களின் உறவினர்கள் நான்கு பேர் என, மொத்தம் 13 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kanns
மே 27, 2025 18:18

Until Vested False Complaint Gangs are Punished by CaseHungry Criminals, Bail& Jail Conditions MUST be Improved/Relaxed


Padmasridharan
மே 27, 2025 13:37

லஞ்சம் பெற்றுக் கொண்டு அடாவடி வேலையை செய்தவர்கள் காவலர்கள் அப்படி இருக்கையில் செயதி தலைப்பில் "லஞ்சம் கொடுத்து" என ஏன் கொடுத்தீர்கள். . கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் வித்யாசம் உண்டு அய்யா..


deva
மே 27, 2025 11:56

அது ராஜஸ்தான்ல மட்டும்மா இப்படி நடக்குது....


ஆரூர் ரங்
மே 27, 2025 11:56

இங்க கூட ஒரு அணில் கம்பிகளுக்குப் பின்னால் ராஜவாழ்க்கை வாழ்ந்ததாக செய்தி. உள்ளிருந்தே பாட்டிலுக்குபத்து சாம்ராஜ்யத்தை அசால்டாக நிர்வகித்ததுதான் சாமர்த்தியம்.


subramanian
மே 27, 2025 09:46

லஞ்சம் இருக்கும் வரை ஊழல் , மோசடி, ஆக்ரமிப்பு, வன்முறை, பயங்கரவாதம், பாலியல் பலாத்காரம் எல்லாம் இருக்கும். நாம் திருந்தாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இப்போது லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் நடக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.


Kannada kanmani rajkumar
மே 27, 2025 08:31

முன்னோடி சசிகலா ஐடியா?


Yes your honor
மே 27, 2025 11:15

அஞ்சு கட்சி அமாவாசை?


அப்பாவி
மே 27, 2025 08:21

சௌக்கிதா........ர்....?


புதிய வீடியோ