உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி

குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி

அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஒரு தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்ததில், விமானி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து குறித்து துணை எஸ்.பி. சிராக் தேசாய் கூறியதாவது:குஜராத்தில் உள்ள அம்ரேலியின் சாஸ்திரி நகர் குடியிருப்புப் பகுதியில் இன்று தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்தார். விமானத்தை ஓட்டிச்சென்றது அனிகேத் மகாஜன் என்பது தெரியவந்துள்ளது.தீயணைப்பு மற்றும் காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கின. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.குஜராத்தில் மார்ச் மாதம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் புறநகரில் மற்றொரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.இவ்வாறு சிராக் தேசாய் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பல்லவி
ஏப் 23, 2025 04:03

அளவுக்கு அதிகமான சுதந்திரம் அநுபவிக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது சகஜம் . RIP sir


thehindu
ஏப் 22, 2025 21:30

மாதம் ஒரு விமான விபத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை