உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 23-ம் தேதி வயநாடு தொகுதியில் பிரியங்கா வேட்புமனு

23-ம் தேதி வயநாடு தொகுதியில் பிரியங்கா வேட்புமனு

புதுடில்லி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்கியுள்ள காங்., கட்சியின் பிரியங்கா நாளை (அக்.23-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளதால், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு நவ.13-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ராகுல், தங்கை பிரியங்கா போட்டியிடுகிறார். வரும் நாளை (அக்.23-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுலை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார் பிரியங்கா. அதனடிப்படையில் முதன்முறையாக வயநாடு லோக்சபா தொகுதியில் காங்.,வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

bgm
அக் 22, 2024 08:08

மெத்த படித்த மேதாவிகள் நிறைந்த மாநிலம். முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும்

RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2024 10:31

நூறு சதவிகித எழுத்தறிவு பெற்றுள்ள மாநிலம் கேரளா ........... மெத்தப் படிப்பது ன்பது வேறு விஷயம் .......

Balasubramanian
அக் 22, 2024 06:03

ஐந்து மாதங்கள் முன்பு வந்த பத்திரிகை செய்திகளை படியுங்கள் வாக்காளர்களே! வீடு இழந்த ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் வீடு கட்டித் தரும் என்று அண்ணன் வாக்களித்து சென்றார்! வீடு கட்ட கடைக்கால் நட்டாரா? என்று கேளுங்கள்! முடிவு உங்கள் கைகளில்

Kasimani Baskaran
அக் 22, 2024 05:50

குடும்பத்தில் உள்ள அனைவரும் போட்டியிட்டு எம்பி யாகிவிடுவார்கள் போல தெரிகிறது. பிரதமர் பதவிக்கு கடும் போட்டு நிலவுகிறது.

புதிய வீடியோ