பிரச்னைக்கு தீர்வு!
நம் நாட்டின் வரலாற்றில் பிரதமர் ஒருவர் மக்களின் அடிப்படை பிரச்னைகளை சுட்டிக் காட்டுவதுடன், அதற்கான தீர்வுகளை தருவது இதுவே முதன்முறை. நாம் அனைவரும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம். எனினும், அதை நாம் அடைய பெண்களுக்கு அதிகாரமளிப்பது அவசியம் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சர், பா.ஜ.,
அதிகரிக்கும் ஆதரவு!
பீஹார் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எங்கு சென்றாலும், ஆயிரக்கணக்கானோர், எங்கள் பேரணியை ஆதரிக்கின்றனர். ஊழல், ஆள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. தங்களின் வீடுகளிலேயே பாதுகாப்பற்ற சூழலை பீஹார் மக்கள் உணர்கின்றனர். தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்ஏன் புறக்கணிக்கவில்லை?
இந்தியா - பாக்., இடையே கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் பலர் புறக்கணித்தது, நம் தேச உணர்வை வெளிப்படுத்துகிறது. ஆசிய ஹாக்கி தொடரை பாக்., புறக்கணித்தது போல், இந்தியா ஏன் இப்போட்டியை புறக்கணிக்கவில்லை? பா.ஜ., ஆதரவு பெற்ற பி.சி.சி.ஐ., - ஐ.சி.சி., அமைப்பைச் சேர்ந்தோர் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். ஆதித்ய தாக்கரே மஹா., - எம்.எல்.ஏ., உத்தவ் சிவசேனா பிரிவு