உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகள் துவக்கம்

காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகள் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.கடைசியாக காஷ்மீர் சட்டசபைக்கு 2014 ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது, பாஜ., ஆதரவுடன் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் முகமது சையத் முப்தி முதல்வராக பதவி வகித்தார். 2018ல் அவர் மறைவைத் தொடர்ந்து, மகள் மெகபூபா முப்தி முதல்வர் ஆனார். 2019 ல் பா.ஜ., ஆதரவை திரும்ப பெற்றதால், மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ttniushi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிறகு 2019 ல் காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு, மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த உத்தரவிட்டு இருந்தது. காஷ்மீரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அம்மாநில மக்கள் விரைவில் பார்ப்பார்கள் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியிருந்தார். இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை பொது தேர்தலுக்காக சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனக்கூறியுள்ளார். இதனையடுத்து சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் துவக்கி விட்டதாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
ஜூன் 08, 2024 12:47

அரசியல் சாசனத்துக்கு இந்த தேர்தல் மற்றவைகள் முக்கியம் நிஜ வாழ்வில் இந்த முறையினால் பயன்பாளிகள் யார் என்பதை உலகறியும் . மக்களுக்காக மக்கள் பிரநிதிகளாக இருந்தால் அருமையாக இருக்கும் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை