உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசர நிலை பிரகடனம் ஒரு தவறான முடிவு: சோனியா கருத்து

அவசர நிலை பிரகடனம் ஒரு தவறான முடிவு: சோனியா கருத்து

புதுடில்லி: காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா, 'பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ்' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம் 544 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை, 'ஹார்பர்காலின்ஸ்' நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில், சோனியாவின் குழந்தை பருவம், இளமை பருவ காதல், படிப்பு, கணவர் ராஜிவ் படுகொலை, அரசியல் வருகை என தன் வாழ்க்கை அனுபவங்களை அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, இந்த சுயசரிதை புத்தகம் குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்தும், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகைக்கு சோனியா பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டில், கடந்த 1975ல் அவசர நிலையை காங்கிரசை சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா அமல்படுத்தினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவது தடை செய்யப்பட்டது. 1977ல் இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது.இந்த அவசர நிலை பிரகடனம் என்பது தவறான முடிவு; அமல்படுத்திய இந்திராவும் இதை பிற்காலத்தில் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். அவர் மனதளவில் ஒரு ஜனநாயகவாதி என நான் கருதுகிறேன். இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், அவசர நிலை அமலில் இருந்த காலத்தில் ஒருபோதும் அவர் நிம்மதியாக இருக்கவில்லை. அது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருந்தது என நினைக்கிறேன்.அவசர நிலை அமல்படுத்திய விவகாரத்தில், இந்திராவின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. என் கணவர் ராஜிவ் இதை எதிர்த்தார்; அடுத்த தேர்தல் வரும் வரை காத்திருக்குமாறு தன் தாயாரிடம் கூறினார். ஆனால், இந்திராவின் இளைய மகன் சஞ்சய், அவசர நிலையை அமல்படுத்தியே தீர வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தினார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்திராவை வீழ்திதிவிடுவர் என்றும் அவர் எச்சரித்தார்.அவசர நிலை விவகாரத்தில் சஞ்சயை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதன் விளைவாக ஏற்பட்ட பல பாதிப்புகளை தடுத்திருக்க முடியும். அவசரநிலை பிரகடனம் என்றாலே பொதுமக்களின் பார்வையில் சஞ்சயின் பெயர் நினைவுக்கு வரலாம். ஆனால், அவர் மட்டும் இதற்கு காரணமல்ல. இந்திராவை சுற்றி இருந்த சில மூத்த தலைவர்கள் சிலரிடம் இருந்தும் இந்த விவகாரத்தில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டது.அவரின் பார்வையில் இருந்து பார்த்தால், அன்றைய சூழலில் அவசர நிலை பிரகடனம் அவசியம் என்றே கருதப்படுகிறது. அந்த சூழலை சமாளிக்க இந்திரா கடுமையாக போராடியதையும் காண முடிந்தது. ஒரு கட்டத்தில் அவசர நிலை அமல்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதத்தை இந்திரா புரிந்து கொண்டார். அதை சரிசெய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

அதிர்ச்சி அளிக்கிறது

அரசியலமைப்பை கொன்று, அடிப்படை உரிமைகளை முடக்கிய அவசர நிலையை சோனியா நியாயப்படுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. நேரு, காந்தி குடும்பத்தினர் செய்த வரலாற்று தவறுகளை இனிப்பான வார்த்தைகளால் மூடி மறைப்பதும், காங்கிரஸ் இழைத்த பெரும் குற்றங்களை மறைப்பதுமே இந்த நூலின் நோக்கமாக தெரிகிறது. சோனியா தன் புத்தகத்துக்கு 'பிலாங்கிங்' என்பதற்கு பதிலாக 'ஒயிட்வாஷிங்' என, பெயரிட்டிருக்கலாம்.- சி.ஆர்.கேசவன்செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

பிரதமராக விருப்பமில்லை!

'கடந்த 2004ல் தேர்தலுக்கு முன், நான் பிரதமராவது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து என் மகன் ராகுல், மகள் பிரியங்காவுடன் கலந்துரையாடினேன். 'காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியே ஏற்பீர்களா?' என, அவர்கள் என்னிடம் கேட்டனர். 'நிச்சயமாக இல்லை. இதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறேன்' என, அவர்களிடம் தெரிவித்தேன். ராகுல், பிரியங்கா இருவரும் தங்கள் பாட்டியின் படுகொலையையும், தந்தையின் கொடூரமான கொலையையும் நேரில் கண்டு, அதிர்ச்சிகரமான அனுபவங்களை எதிர்கொண்டவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, பிரதமர் பதவியில் இருப்பது என்பது ஆபத்துகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இருந்தது. நான் என் கருத்தை வெளிப்படையாக கூறியபோது, அவர்கள் நிம்மதியடைந்தனர். இந்த விஷயத்தில் கூட்டணி தலைவர்கள் கூட நான் பிரதமராக வேண்டும் என வலியுறுத்தினர். பலவித மனப்போராட்டங்களுக்கு பின் பிரதமர் பதவி வேண்டாம் என்ற முடிவை உறுதியாக அவர்களிடம் தெரிவித்தேன்' என, சுயசரிதை நூலில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக விரும்பிய பிரணாப் முகர்ஜி

'கடந்த 2010ல், ஒருமுறை தன் அதிருப்தியை வெளிப்படுத்திய பிரணாப், 'தலைமை மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது' என, குறிப்பிட்டார். இது எனக்கு அதிர்ச்சியளித்தது. அவர் பிரதமராக வேண்டும் என நீண்டகாலமாக கொண்டிருந்த விருப்பத்தின் வெளிப்பாடு இது என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் மென்மையாக பேச்சை வேறு தலைப்புக்கு மாற்றினேன். அவர் ஏமாற்றமடைந்திருக்கலாம். ஆனால், என் மீது எந்த அதிருப்தியும் காட்டவில்லை' என, தெரிவித்துள்ளார்.

அலைபாய்ந்த் கிளிண்டன்

'கடந்த 2000ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்தார். தன் மகன் செல்சியாவையும் அவர் அழைத்து வந்திருந்தார். அப்போதைய வெளியுறவு அமைச்சருடன் கிளிண்டனை ஹோட்டலில் சந்தித்தேன். நட்பாகவும், இயல்பாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் காணப்பட்டார். எங்கள் கருத்துக்கு செவிசாய்ப்பதைவிட, காஷ்மீர் குறித்த தன் சொந்த கருத்துகளையும், கணிப்புகளை கூறுவதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். 'பூமியின் மிகவும் ஆபத்தான இடங்களில் காஷ்மீரும் ஒன்று' என்றார். அப்போது, கிளிண்டன் மற்றும் அவரது உதவியாளர் மோனிகா லெவின்ஸ்கி இடையிலான உறவு குறித்த சர்ச்சை ஓய்ந்திருந்தது. ஆனால், பழைய பழக்கம் அவ்வளவாக மாறாது என்பார்கள். அவரை கவுரவிக்கும் வகையில். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அளித்த விருந்தின் போது, அங்கிருந்த பெண்களை யாருக்கும் தெரியாமல் கிளிண்டன் நோட்டமிட்டதை நான் கவனித்தேன்' என, சோனியா கூறியுள்ளார்.

இருமுறை புற்றுநோய் பாதிப்பு

தன் உடல்நலப் பாதிப்பு குறித்து கூறுகையில்,'2010ல் மார்பக புற்றுநோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரண்டு கட்டிகள் அகற்றப்பட்டன. அப்போது, கதிர்வீச்சு சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு பின், கணையத்தில் ஒரு கட்டி வளர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முந்தைய பாதிப்பின் தொடர்ச்சியாக இது இருக்கும் என பயந்தேன். மனதளவில் மிகவும் நிலைகுலைந்தேன்; கவலையடைந்தேன். மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2016ல், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு தோள்பட்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Iyer
நவ 11, 2026 08:28

நீ 2004 ல் பிரதமர் பதவிக்கு 200+ MP க்களின் ஆதரவு கடிதத்துடன் Dr. அப்துல் கலாம் அவர்களிடம் கொடுத்ததை மறுக்கமுடியாது. சரியான நேரத்தில் Dr. சுப்பிரமணிய சுவாமி Dr. கலாம் அவர்களை சந்தித்து - இந்தியாவை ஒரு பேராபத்தில் இருந்து காப்பாற்றினார். உன் பொய்களை புத்தகமாக்கினால் எல்லோரும் நம்பிவிடுவார்களா? இன்னொரு புத்தகம் எழுதி - அதில் BOFORS, 2G ஊழல், மற்றும் நீ செய்த பல இமாலய ஊழல்களைப்பற்றி விரிவாக எழுது


Iyer
நவ 11, 2026 07:59

அவசரநிலை தவறான முடிவு இல்லை. பாரதத்திற்கு எதிராக உன் ஊழல் குடும்பம் புரிந்த மாபெரும் குற்றம் அந்த குற்றத்தின் எதிரொலியாக - மாநிலம் மாநிலமாக CONGRESS கட்சி அழிந்து மறைந்து வருகிறது.


R.RAMACHANDRAN
நவ 11, 2026 07:03

இந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் இருந்த பொது அதிகார வர்கம் குற்றங்கள் புரிய அச்சப்பட்டது. அதன் பிறகு லஞ்சம் இன்றேல் சேவை இல்லை லஞ்சம் கொடுப்பவர்களுக்காக எந்த விதமான குற்றங்களையும் செய்வோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என அரசின் மூன்று அங்கங்களில் உள்ளவர்களும் இறுமாந்திருக்கின்றனர். இந்திய அரசமைப்பு மற்றும் சட்டங்கள் அனைத்தும் வறியவர்கள் மற்றும் நேர்மையானவர்களை பொறுத்தளவில் அவை செயல்பாட்டில் இல்லை.இவை தான் இந்த நாட்டின் ஜனநாயகம் என வெட்கமில்லாமல் போற்றுகின்றனர்.


Bhaskaran
நவ 11, 2026 05:50

போப் வந்த போது மிக உற்சாகமாக வரவேற்றவர் .வந்தேமாதரம் பாடும்போது அதை நிறுத்த சொன்னவர் புளுகுகளைசுயசரிதையாக எழுதியுள்ளார்.


சவுரி ராஜன்
நவ 11, 2026 05:29

குடியுரிமை பெறாமலேயே தேர்தலில் வாக்களித்தது பற்றியும் கருத்து சொல்லியிருக்கலாம்


Govi
நவ 11, 2026 03:27

அவசர நிலபிரகடனம் சரியான முடிவு இந்திரா போல் துனிவு இல்ல அப்ப எல்லாம் சரியா நடந்தது


வேணு
நவ 10, 2026 23:49

ok.... புத்தகம் வெளிவந்தாச்சு அடுத்தபடியாக "" தங்கப் பெண்"" என்று திரைப்படம் வெளிவரும் எல்லாவற்றிற்கும் காசு கொடுக்க ஒரு கூட்டமே இருக்கும் போது என்ன செய்வது எல்லாம் தலையெழுத்து .... வாழ்க இந்துஸ்தான்


சண்முகம்
நவ 10, 2026 23:45

அவசர நிலையின் போது திமுக பட்ட அடியைப் பார்த்திருந்தால், அவசரநிலையை அனுபவித்து இருப்பீர்கள். ஊழல் இல்லாமல் அரசு அலுவலங்கள், அரசு ஊழியர்கள் கருமமே கண்ணாய் செய்த வேலை,நேரப்படி பஸ். மற்றும் இரயில், என்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். மீண்டும் வர வேண்டும்.


சசிக்குமார் திருப்பூர்
நவ 10, 2026 23:31

என்னது இது பிரதமர் ஆக மாட்டேன் என்று முடிவு செய்து இருந்தாரா. அப்புறம் எதற்காக அப்போதைய ஜனாதிபதி இடம் 17 முறை என்னை பிரதமர் ஆக்கு எல்லா எம்பிக்கள் கையெழுத்து போட்டதை காட்டி நச்சரித்தது


ஆரூர் ரங்
நவ 10, 2026 22:50

மறைக்கப்பட்ட விஷயம். 1980 லோக்சபா தேர்தல் முடிவுகள் சாதகமாக வரும்வரை இட்டாலி தூதரகத்தில் குழந்தைகளுடன் ஒளிந்து அடைக்கலம் அடைந்திருந்தார் ஒருவர்.


புதிய வீடியோ