உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை

திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை

புதுடில்லி: ‛‛ அரசில் கவனம் செலுத்துவதுடன், திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு இன்று இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறது. புதிய அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ltullxz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பிரதமர் மோடி, தனது வீட்டில் தேஜ கூட்டணி எம்.பி.,க்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில், மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்கள் கலந்து கொண்டனர். அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், மனோகர்லால் கட்டார், எல்.முருகன், குமாரசாமி, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவரும் அரசில் கவனம் செலுத்தி, திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும். அமைச்சராக பதவியேற்றதும் துறை ரீதியிலான பணிகளில் கவனம் செலுத்தி, முதல் 100 நாளில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை அமல்படுத்துங்கள். இவ்வாறு மோடி பேசினார்.மத்திய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014 முதல் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
ஜூன் 10, 2024 13:27

நதிகளை ஒன்றிணைத்தல், குடிநீர் ஆதாரங்களை மாநில அரசுகளின் கூட்டு சேர்ந்து புதிதாக நீர்நிலைகளை உருவாக்குங்கள், மழை நீரை கடலில் கலக்கமாட்டோம் என்று உறுதிமொழிபை எடுத்துக்கொண்டு விவசாயத்தைப்பெருக்கி, நீர்வழி போக்குவரத்தையும்க் தொடங்கி, தனியார் கப்பல்களுக்கு அனுமதி அளித்தால் வேலை வாய்ப்பும் பெருகும் . பொருளாதாரமும் வளர்ச்சி பெரும், வந்தே மாதரம்


ஜெயராஜ்
ஜூன் 10, 2024 12:25

எல்லார் கிட்டேயிருந்தும் உருவி உ.பி ல கொட்டுனீங்க. அவிங்களுக்கே திக்கு முக்காடிப் போச்சு.கவுத்துட்டாங்க.


என்றும் இந்தியன்
ஜூன் 09, 2024 21:07

அதற்கான் பணத்தை பிஜேபி அரசு ஒதுக்குவதில்லை எப்படி முடிக்கமுடியும் - இப்படிக்கு உளறல் நோபல் பரிசு பெற்ற பப்பு மற்றும் ஸ்டாலின்


Ramesh Sargam
ஜூன் 09, 2024 19:59

மத்திய அரசின் திட்டங்கள் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டும். ஊழல்வாதிகள், தேசதுரோகிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.


Sankar Ramu
ஜூன் 09, 2024 18:22

வாழ்க மோடி. வாழ்த்துக்கள் மந்திரிகளே ???


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை