உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி

ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார், மேற்குவங்கத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.பிரதமர் மோடி ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11மணிக்கு பீஹாரில் உள்ள கயாவில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.இரண்டு ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதன் பிறகு, கங்கை நதியின் மீது அன்டா - சிமாரியா பாலத் திட்டத்தைப் பார்வையிட்டுத் தொடங்கி வைக்க உள்ளார்.கோல்கட்டாவில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகளை மாலை 4:15 மணியளவில் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். மேலும் ஜெசோர் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து ஜெய் ஹிந்த் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்வார். மேலும், கோல்கட்டாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.RAMACHANDRAN
ஆக 21, 2025 07:48

தேர்தல் வரும் போதெல்லாம் திட்டங்கள் வரும்.தேர்தல் முடிந்து வெற்றி பெற்றுவிட்டால் நான்கு ஆண்டுகளுக்கு அந்த பகுதியை திரும்பி பார்க்க மாட்டார்கள்.


தாமரை மலர்கிறது
ஆக 21, 2025 02:04

பிஜேபி ஜெயிப்பது இது போன்ற திட்டங்களால் தான். இது புரியாமல் ராகுல் ஒட்டு திருட்டு என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.


K.n. Dhasarathan
ஆக 20, 2025 21:24

பிரதமரே காசையெல்லாம் பீகாருக்கும், மேற்கு வங்கம் என்று செலவழித்துவிட்டு தமிழகத்திற்கு மட்டும், பட்டை நாமம், புதிய ரைல்கள் வராது, செமி கண்டக்டர் ஆலையை மிரட்டி தமிழகத்திலிருந்து குஜராத்திற்கு கொண்டு போயாகி விட்டது, புயல் வெள்ளம் காசு கொடுக்க மாட்டேன், 1947 லில் புயல் வெள்ளம் சேதம் பற்றி கணக்கு கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஓட்டு மட்டும் எப்படி கிடைக்கும்.?


Gokul Krishnan
ஆக 20, 2025 20:40

தேர்தல் வந்தால் ஜி யின் கடைக்கண் பார்வை படும் ஆதித்யா சில மாதங்களுக்கு பீகார்க்கு சலுகை காண மழை தான் அம்ரித் பாரத் வந்தே பாரத் உட்பட பீகார் மாநிலம் தான் இந்தியாவில் ஜி டி பி யில் நம்பர் கூட செய்தி வரும்


vivek
ஆக 20, 2025 21:20

உங்களுடன் ஸ்டாலின் அதை போலதானே சொம்புகளா


Narayanan Muthu
ஆக 20, 2025 19:57

தேர்தல் கால ஞானோதயம். தேர்தல் முடியும் வரை சின்ராசுவ கையிலேயே பிடிக்கமுடியாது.


vivek
ஆக 20, 2025 21:21

சொத்தை முத்து ஒரு நாள் இருநூறு கூலி வாங்காம கருத்து போடுவாயா


Jack
ஆக 20, 2025 17:57

பணக்காரர்கள் தான் பயணிப்பார்கள்


Nada raja
ஆக 20, 2025 17:33

ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்


சமீபத்திய செய்தி