உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய் குறியீடு மாற்றத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய் குறியீடு மாற்றத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

புதுடில்லி: ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது ' எனக்கூறியுள்ளார்.தமிழக பட்ஜெட் நாளை( மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் இலச்சினையில் தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீட்டை மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்துடன் கூடிய லச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=765bx7z3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் குறியீட்டை நீக்கியுள்ளதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. தி.மு.க.,விற்கு உண்மையிலேயே ரூபாய் குறியீட்டுடன் பிரச்னை இருந்தால், 2010ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் தி.மு.க., இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?இந்தச் சின்னத்தை தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், தி.மு.க., ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன. 'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாசார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.ரூபாய் சின்னம் என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. யுபிஐ பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ரூபாய் குறியீடு போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

अप्पावी
மார் 14, 2025 15:44

ரூ ந்னு போடறாதால பிரிவினை வாதம் வராது. ₹ போடணும்னு வற்புறுத்தினால் இந்தித் திணிப்பாக பார்க்கப்படும்.


Akbar Ali
மார் 14, 2025 14:46

இது தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் யாரும் கதற வேண்டாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 14, 2025 13:48

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தார்கள் கேவலப்படுத்துவதாக நினைத்து. தன் வினை தன்னைச் சுடும் கெடுவான் கேடு நினைப்பான் என்பதை போல் தமிழ்நாடு முன்னால் ரூ என்று போட்டு ரூரல் தமிழ்நாடு அதாவது கிராமபற தமிழ்நாடு என்று இவர்களே இவர்களை தரம் தாழ்த்தி கொண்டனர். ஒன்றியத்திற்கு கீழ் தனை கிராமபுறம் வரவேண்டும்.


SVR
மார் 14, 2025 12:32

1000 கோடி ரூபாய் ஊழல் டாஸ்மாக்கில் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறது. அதன் சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் யார் யார் எல்லாம் சிக்க இருக்கிறார்களோ தெரியவில்லை. அந்த விஷயத்தை திசை திருப்ப இந்த ரூபாய் விஷயத்தை திராவிட அரக்கர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ரூபாய் விஷயம் நம் நாட்டு அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. மகாபாரதத்தில் ஷிஷுபாலன் என்பவன் கிருஷ்ணனை மிகவும் அவமதித்து நடந்து கொண்டிருந்தான். அதை பார்த்து கிருஷ்ணன் கோப பட்டு அவனை சம்ஹாரம் செய்வதற்கு தயாரானார். இதை கேட்ட அந்த ஷிஷுபாலனின் தாயார் அவனை மன்னித்துவிடு என்று உயிர்பிச்சை கேட்டார். அதற்கு செவி சாய்த்து கிருஷ்ணனும் அவன் தாயாரிடம் ஷிஷுபாலனுடைய நூறு அவமதிப்புக்களை தாங்கிக்கொள்வேன். நூற்றிஓராவது தடவை அவன் என்னை அவமதித்தால் அவனை நான் சம்ஹாரம் செய்துவிடுவேன் என்று சொல்லி தாயாரின் அநுமதியை பெறுகிறார். ஷிஷுபாலனும் கிருஷ்ணனை நூறு தடவை அவமதித்தான். பிறகு நூற்றியோரவது தடவை அவமதித்தபோது அவனை கிருஷ்ணன் வதம் செய்கிறார். இப்போது இந்த மகாபாரதத்தில் சொல்லப்பட்ட சம்பவம் நினைவிற்கு வருகிறது. மோதியும் காலம் கனிய காத்திருக்கிறார். சரியான சமயத்தில் அவரும் இந்த திராவிட அரக்கர்களை ஒழிப்பார் என்று மக்களும் நம்பலாம். இந்த அரக்கர்கள் எல்லையை மீறிவிட்டார்கள். இவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது. சாணக்கியன் எப்படி நந்த வம்சத்தை வேரருப்பேன் என்று சபதம் செய்து அதனை நிறைவேற்றினார் என்கிற வரலாறும் நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் நிறைவேற்றப்படட்டும்.


Madras Madra
மார் 14, 2025 11:32

எப்படியாவது ஆட்சியை கலைக்க வைக்கவே திமுக இதை செய்கிறது அப்பத்தான் வெற்றி பெற முடியும் என்று நன்றாக தெரிந்து விட்டது ஏனென்றால் இவர்கள் ஆட்சி லட்சணத்தை பல்லிளிக்க செய்து விட்டார் அண்ணாமலை இன்னும் எவ்ளோ டிராமா செஞ்சாலும் கண்டிப்பாக மத்திய அரசு இவர்களை ஆள விட்டு ஆப்படிக்குமே தவிர ஒரு போதும் கலைக்காது


Vel1954 Palani
மார் 14, 2025 14:16

அந்த சார் விஷயத்தை திசை திருப்பும் நாடகம் .மக்களையும் மூடனாக்கும் முயற்சி.


Anbuselvan
மார் 14, 2025 10:22

கடந்த 05/03/2009 ஆம் ஆண்டு அப்போதைய UPA அரசாங்கம் ஒரு போட்டியை அறிவித்தது, அதாவது இந்திய பணத்திற்கு ஒரு குறியீடு வடிவமைக்க வேண்டும் அது இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நெறிமுறைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. பிறகு 2010 பட்ஜெட் கூட்ட தொடரில், அப்போதைய UPA அரசு மொத்தம் 3331 பதில்கள் responses வந்து உள்ளதாகவும் அவற்றிலிருந்து ஐந்து மட்டும் தேர்வு செய்து பரிசீலித்து வருவதாகவும் அறிவித்தது. 24/06/2010இல் கூடும் அமைச்சரவை கூடி முடிவு எடுப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏதோ காரணங்களினால் முடிவு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக UPA அரசாங்கம் திரு உதயகுமார் வடிவமைத்த ₹ குறியீட்டை இறுதியாக தேர்ந்து எடுத்து அமலுக்கு கொண்டு வந்தது. இதுதான் புதிய இந்திய பணத்தின் குறியீட்டின் கதையாகும்.


Ray
மார் 14, 2025 15:37

அது இந்தி எழுத்தா இருந்ததாலதான் வட இந்தியா ஏத்துக்கிச்சு என்பதே உண்மை.


Svs Yaadum oore
மார் 14, 2025 10:09

இவ்வளவு நூல்களை சொன்ன நீங்கள் சுமார் 3000 ஆண்டுகளான தொல்க்காப்பியத்தை மறந்துவிட்டீர்களே சாமி என்று மலேசியாவிலிருந்து ..தமிழ் படிக்க தெரிந்தவருக்கு 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் நல்லதை நினைப்பேன் எழுதியிருப்பது புரியும் ...


Palanisamy T
மார் 14, 2025 09:53

இரண்டு காட்டெருமைகள் கொடூரமாக சண்டைப் போட்டுக் கொள்வதை நரி வாயில் எச்சி ஊற வேடிக்கைப் பார்த்து காத்துக் கொண்டிருந்தாம் அதில் ஒன்றுமட்டும் நிச்சயமாக மடிவது உறுதி. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் பகைத்து சண்டைப் போட்டுக் கொள்ளாமலும் நல்ல அரசியல் நாகரீகத்த்தோடு நடந்துக்கொள்வார்கள் என நம்புவோம். இல்லையென்றால் பாஜக ஆட்சி அமைப்பதை தவிர்க்க முடியாது.


Svs Yaadum oore
மார் 14, 2025 10:26

இரண்டு காட்டெருமைகளும் மக்கள் நலனுக்காக கொடூரமாக சண்டை போட்டதாம் .....அதை மலேசியாவிலிருந்து இன்னொரு எலி ஓசியில் வடை கிடைக்குமா என்று பரிதாபமாக பார்த்தாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா .....


RAVINDRAN.G
மார் 14, 2025 09:51

எதையோ மூடிமறைக்க திருட்டு திமுக தேவையில்லாத விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்குகிறது. டாஸ்மாக் ரைடு, யார் அந்த சார் பற்றி எந்த மீடியாவிலாவது விவாதம் நடந்ததா? சற்று சிந்திப்பீர் மக்களே.


RAVINDRAN.G
மார் 14, 2025 09:51

எதையோ மூடிமறைக்க திருட்டு திமுக தேவையில்லாத விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்குகிறது. டாஸ்மாக் ரைடு, யார் அந்த சார் பற்றி எந்த மீடியாவிலாவது விவாதம் நடந்ததா? சற்று சிந்திப்பீர் மக்களே.


புதிய வீடியோ