உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர்கள் மீது வழக்கு: அமலாக்கத் துறைக்கு சுப்ரீம்கோர்ட் கடிவாளம்!

அரசு ஊழியர்கள் மீது வழக்கு: அமலாக்கத் துறைக்கு சுப்ரீம்கோர்ட் கடிவாளம்!

புதுடில்லி:அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த, அரசு ஊழியர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளது. அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை செய்த பணப்பரிமாற்ற வழக்கை, தெலுங்கானா ஐகோர்ட் ரத்து செய்தது.இதனை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில், அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு, இன்று(நவ.,06) நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி.மாசி அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: * குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி, முன் அனுமதி பெறுவது அவசியம்.* அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முன் அனுமதி பெற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து, மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Selvaraj
நவ 07, 2024 18:31

அமலாக்கத்துறை எந்த வழக்கிலும் சரியான முறையில் செயல் படுவதில்லை என்பதால் அந்த துறையையே தடை செய்து விடலாம் என்றுகூட தீர்ப்பளிக்க லாம். யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை..


spr
நவ 07, 2024 01:28

நீதிமன்றங்கள் இருக்கும் சட்டத்தை வைத்தே தீர்ப்புக்களை வழங்குவதால் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தெரிய வந்தும் அதனைத்ந்திருத்த மனமில்லாத மத்திய மாநில அரசுகளே குறை சொல்லப்பட வேண்டிய ஒன்று. சென்ற முறை நல்ல வலுவான நிலையில் இருந்த போதே இதனைச் செய்யாத மோடி அரசு இப்பொழுது செய்யுமா என்பது சந்தேகமே அரசு அதிகாரிகள் ஆட்சியில் இருப்பவர் சொல்வதனை நிறைவேற்ற வேண்டிய கடமையில் இருப்பதால் எல்லா செயல்களிலும் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது அமுலாக்கத்துறை முறையாக அனுமதி பெறாமல் செயல்பட்டது அதற்கு சட்ட விதிகள் தெரியவில்லை என்பதாலா இல்லை எதேச்சாதிகாரமா எதேச்சாதிகாரம் என்றால் இந்த தீர்ப்பு சரியே எதேச்சாதிகாரமாகச் செயல்பட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகளை பதவி இறக்கலாம் அல்லவா


Mohanakrishnan
நவ 06, 2024 22:14

மொட்டை தாத்தான் குட்டையில் விழுந்தான் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும், லஞ்சத்தை சுருட்டிய மந்திரியா அல்லது அநீதி அரசரா


Tetra
நவ 06, 2024 21:43

ஆக மொத்தம் அரசு ஊழியர் லஞ்சம்‌ வாங்கினா அவர் யாருக்காக வாங்கினாரோ அவுக கிட்ட போயி அனுமதி வாங்கணுமா? அதுக்கு இ டி ஐ போடின்னு சொல்லிரலாம்


JEBARAJ
நவ 06, 2024 20:56

சபாஷ் சுப்ரீம் கோர்ட். சர்வாதிகாரம் ஒழிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாக உள்ளது.


JEBARAJ
நவ 06, 2024 20:54

சபாஷ் சுப்ரீம் கோர்ட். எந்த அதிகாரமும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கனும். இல்லனா சர்வாதிகாரிகள் உருவாகுவார்கள். ஆபத்து.


Rajasekar Jayaraman
நவ 06, 2024 19:49

அரசு ஊழியர் தப்பு செய்யலாமா? கோர்ட்டுக்கும் இது ஒரு தற்காப்பு கேடயம்


Kothandampillai kothandampillai
நவ 06, 2024 19:18

அரசுக்கு நீதிதுறை லஞ்சம், தவறுக்கு துணை போவது உலகம் அறிந்து கெண்டது, இதற்கு நீதி தேவதை தான் சாட்சி,


Selvaraj K
நவ 06, 2024 18:07

பாதிக்கப்பட்டவன் கடைசி நம்பிக்கை நீதி மன்றங்கள். இப்படி தான் எனக்கு நீதி மன்றங்கள் தடையா இருக்குது பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்கனும்னா வக்கீல் தொழில் செய்யறவங்களை நீதிபதியாக நியமிக்க கூடாது தவறானவங்களை கொல்சீயம் நீதிபதியாக நியமிக்குது அரசு நீதிதுறைக்கு வழங்கும் சலுகை மற்றும் நிதியை ரத்து பண்ணனும்


Dharmavaan
நவ 06, 2024 17:48

தர்மத்துக்கு நிஜமான முட்டுக்கட்டை கோர்ட் /உச்ச நீதியே கேவலம் நடைமுறை அறிவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை