உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு; வன்முறையில் 3 பேர் பலி

ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு; வன்முறையில் 3 பேர் பலி

சம்பல்: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் மசூதிக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது; மூவர் பலியாகினர்.உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மசூதி கட்டப்பட்டது தொடர்பாக,கோர்ட் உத்தரவுப்படி, சில தினங்களுக்கு முன் ஆய்வுக்கு சென்ற அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில், இன்று ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்பாட்டக்காரர்கள். போலீஸ் பாதுகாவலர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அதை தொடர்ந்து, போலீஸ் தரப்பில் கண்ணீர் புகை குண்டை வீசினர். அதைதொடர்ந்து தீ வைப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.சம்பவம் குறித்து மொராதாபாத் டிவிசனல் கமிஷனர் ஆஞ்சநேய குமார் சிங் கூறுகையில்ஜாமா மசூதியை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாற்றுக்கணக்கானோர் திரண்டனர். இந்த நிலையில் வன்முறையில் அவர்கள் ஈடுபட்டனர். கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைந்து போக அறிவித்தோம். அவர்கள் கலையாததால், கண்ணீர் புகை குண்டு வீசினோம். கல்லெறிந்தவர்களில் இருவர் பெண்கள். அவர்களை கைது செய்துள்ளோம்.இந்த வன்முறையில் 3 பேர் பலியானார்கள். பலியானவர்களை அடையாளம் கண்டுள்ளோம். பலியானவர்கள் நவ்மேன், பிலால் மற்றும் நைம் என தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தில் 15 போலீசார் காயமடைந்தனர். துணை கலெக்டருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. பிரதிநிதிகளுடன் பேசி வருகிறோம்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathyanarayanan Sathyasekaren
நவ 24, 2024 21:52

இதை எல்லாம் பார்க்கும் போது மோகன்தாஸ் காந்தி மீதும், அவருக்கு எதிர்ப்பு சொல்லாமல் இருந்த அப்போதைய ஹிந்து தலைமுறை மீதும் கோபம் அதிகரிக்கிறது. . .


Sathyanarayanan Sathyasekaren
நவ 24, 2024 21:50

இந்த பயங்கரவாத மதத்தினருக்கு பேச்சுவார்த்தை பலன் தராது, இவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதிலடி கொடுக்கவேண்டும். இவர்களின் புத்தி தெரிந்து தகுந்த படை பலத்துடன் செல்லாதது அதிகாரிகளின் தவறு. பெண்களையும், குழந்தைகளையும் முன் வைத்து பின்னால் இருந்து கல் எறியும் கோழைகள் . ஒருமுறை தகுந்த பதிலடி கொடுத்தால் மூடிக்கொண்டு இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை