உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடி மாதத்தில் இறைச்சி விற்க எதிர்ப்பு: கே.எப்.சி.,க்கு போடப்பட்டது பூட்டு

ஆடி மாதத்தில் இறைச்சி விற்க எதிர்ப்பு: கே.எப்.சி.,க்கு போடப்பட்டது பூட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஜியாபாத்: உ.பி.,யில், ஆடி மாதத்தையொட்டி, காஜியாபாதில் கே.எப்.சி., நசீர் புட்ஸ் உள்ளிட்ட முக்கிய அசைவ உணவகங்களை இழுத்து மூடி, ஹிந்து ரக்ஷா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடியை, வட மாநிலங்களில் சாவன் மாதம் என்று அழைக்கின்றனர். இந்த மாதத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவது அங்கு வழக்கம்.மேலும், கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்று, உள்ளூர் சிவன் கோவில்களுக்கு கன்வார் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், உ.பி.,யின் காஜியாபாதில் கன்வார் யாத்திரை வழித்தடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், அசைவ உணவுக்கு முழுமையான தடை விதிக்கக்கோரி, ஹிந்து ரக்ஷா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புனித யாத்திரை செல்லும் பாதைகளை ஒட்டி இறைச்சி விற்பது, சமைப்பது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, காஜியாபாதின் வசுந்தரா பகுதியில், அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனாலும், அங்கு சென்ற ஹிந்து ரக்ஷா அமைப்பினர், கே.எப்.சி., நசீர் புட்ஸ் உள்ளிட்ட முக்கிய அசைவ உணவகங்களை இழுத்து மூடினர். போராட்டத்தின்போது, 'பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம்' போன்ற முழக்கங்களையும் எழுப்பினர். 'லட்சக்கணக்கானோர் பக்தியில் மூழ்கியிருக்கும்போது, மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய விஷயங்களைத் தவிர்த்து, அவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டியது அவசியம்' என, போராட்டக் காரர்கள் தெரிவித்தனர். மேலும் ஆடி பண்டிகையின் போது இறைச்சி விற்பனை தொடர்ந்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் ஹிந்து ரக்ஷா அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 14:00

பாகிஸ்தானில் கூட இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றே குறிப்பிடுகின்றனர். ஈவேரா கூட பொதுவாகவே இந்து என்றால் இந்தியன் என்றுதான் பொருள் என்றார். இந்தியர்கள் அனைவரும் ஹிந்து நம்பிக்கைகளை மதித்தல் கட்டாயம்.


பாபு
ஜூலை 20, 2025 09:43

ஆடி முடிஞ்சதும் இவனுங்களே ஆடு, கோழிகளை பொளி போடுவாங்க.


வினோத்
ஜூலை 20, 2025 02:44

இந்த மாதிரி மத வெறி வளர்ந்தால் இந்தியா ஆப்கானிஸ்தான் போல் ஆகி விடும்


Thravisham
ஜூலை 20, 2025 06:25

ஹிந்து மத உணர்வு எழுச்சி. மதச்சார்பின்மை என்று பெருவாரி சமூகத்தை ஏமாற்றிய கும்பலை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டனர். சமீபத்தில் சீனா சென்றிருந்தேன். அங்குள்ள பெரும்பாலான மக்கள் பாரதத்தை இந்து என்றே குறிப்பிடுகின்றனர்


Haja Kuthubdeen
ஜூலை 20, 2025 07:47

அரேபிய நாடுகள் அனைத்திலும் இந்தியர்களை ஹிந்தி என்றே சொல்வார்கள்.இது மொழி மதத்தை குறிக்கும் சொல் அல்லநாட்டை குறிக்கும் சொல்.


முக்கிய வீடியோ