உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு முதல்வரை கண்டித்து அகதிகள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு முதல்வரை கண்டித்து அகதிகள் போராட்டம்

புதுடில்லி:குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கருத்து தெரிவித்ததை கண்டித்து, ஹிந்து, சீக்கிய அகதிகள் நேற்று அவரது இல்லம் அருகே போராட்டம் நடத்தினர்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை முதல் அமல்படுத்தியது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையில், “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மக்களை இந்த சட்டம் வாயிலாக குடியமர்த்த பா.ஜ., விரும்புகிறது. தனக்கென ஒரு ஓட்டு வங்கியை உருவாக்க விரும்புகிறது. இவர்களால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவர்,” என கூறியிருந்தார்.முதல்வரின் இந்த கருத்தைக் கண்டித்து, டில்லியில் வசிக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய அகதிகள், நேற்று சந்த்கிராம் அகாரா அருகே கூடினர். அங்கிருந்து முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.போராட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது:எங்களுக்கு வேலை, வீடு யார் தருவார்கள் என்று முதல்வர் கேட்கும் வேளையில், நரேந்திர மோடி அரசு எங்களுக்கு குடியுரிமை தருகிறது. இவருக்கு எங்கள் வலி புரியவில்லை.குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் அகதிகளுக்கு எதிரான தனது அறிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பப் பெற வேண்டும். தன் கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரோகினி, ஆதர்ஷ் நகர், சிக்னேச்சர் பாலம், மஜ்னு கா தில்லா ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய அகதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.பாகிஸ்தானியர்கள் முழு போலீஸ் பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் என் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த நாட்டின் விவசாயிகள் டில்லிக்கு வரக்கூட அனுமதி கிடையாதா? நம் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள், தடிகள், ராடுகள் தோட்டாக்கள் வீசப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு இவ்வளவு மரியாதையா?- அரவிந்த் கெஜ்ரிவால்,முதல்வர், போராட்டம் குறித்து 'எக்ஸ்' பதிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ