உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள்... தீவிரம்! இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு அதிகரிப்பு

 பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள்... தீவிரம்! இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு அதிகரிப்பு

புதுடில்லி : நம் அண்டை நாடான பாகிஸ்தானின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அதிகாரம் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து அங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.நாடு சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட பிரிவினையை அடுத்து, பாகிஸ்தான் தனி நாடாக உருவானது. அப்போது, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய காஷ்மீர் மறுத்தது. நீண்ட இழுபறிக்குப் பின், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.ஆனால், அதற்கு வடக்கே உள்ள 13,297 சதுர கி.மீ., பரப்புள்ள பகுதி, ஆசாதி காஷ்மீர் என்ற பெயரில் தனி பகுதி யாகச் செயல்பட முடிவு செய்தது. இந்தப் பகுதியை பாகிஸ்தான் நிர்வகித்து வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தான், ஆசாதி காஷ்மீர் என்றழைக்கிறது. அதே நேரத்தில் இந்தியா, இந்தப் பகுதியை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறது.

வளர்ச்சி பணி

காஷ்மீரின் ஒரு பகுதி யாக இருந்த இந்த இடத்தை மீட்பதற்காக மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அங்கு பல மனித உரிமை மீறல்கள் நடப்பதாக நீண்டகாலமாக புகார் உள்ளது. தன்னாட்சி உள்ள பகுதியாக இருப்பதால், அங்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.பாகிஸ்தான் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் போலீஸ் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக, மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இவ்வாறு நடந்த போராட்டங்களின்போது, போலீசார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில், சமீபத்தில் இரண்டு சிறுமியர் உயிரிழந்தனர். இதையடுத்து, மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் மற்றும் ராவலகோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக உள்ளன.

கண்ணீர் புகை குண்டு

இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து, அங்கு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோர், பாகிஸ்தான் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்து உள்ளன.இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவிட்ட, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்.

அமித் ஷா சூளுரை

உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மற்றும் ஜம்மு -- காஷ்மீர் முன்னாள் முதல்வரான தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளனர். அதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உரிமை கேட்க வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.அவர்களிடம் அணுகுண்டு உள்ளது என்பதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பயப்படலாம்; நாங்கள் பயப்பட மாட்டோம். ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் உறுதியாக மீட்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

K.Muthuraj
மே 16, 2024 11:05

பஞ்சம் பட்டினின்னு அங்கே எவன் இருக்கான் ஒவ்வொருத்தனும் கொழு கொழுன்னு மாதிரி இருக்கான் நம் மக்களை பாருங்கள் எலும்பும் தோலுமாய் அல்லது நெஞ்சம் ஒடுங்கி - தொப்பை தள்ளி..


மொட்டை தாசன்...
மே 16, 2024 08:59

இணைப்பது தேவையில்லாத வேலை


S.jayaram
மே 14, 2024 20:46

வேலியில் போற ஒனாணை வேஸ்டிக்குள் விட்டு கொண்ட கதை ஆகிவிடும் ஏற்கனவே கோடிக்கும் அதிகமாக உள்ள இஸ்லாமியர்களும் இவர்களும் சேர்ந்தால் எண்ணிக்கை அதிகமாகும் அவர்கள் நமது சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் எங்கள் இஸ்லாமிய சட்டப்படி நடப்போம் என்பார்கள் அவர்களுக்கும் மற்ற மாநிலங்களின் வரிப்பணத்தை கொடுத்து வீனடிக்கணுமா? விசுவாசம் சிறிதும் அற்றவர்கள் இந்த இஸ்லாமியர்கள், நாட்டில் அனைவரும் சமம் என்பார்கள் ஆனால் அவர்கள் மற் இஸ்லாமிய சட்டப்படி நடப்போம் என்பார்கள் ஆண்ட்ரே அனைவரையும் விரட்டி இருக்கணும் அல்லது பெரும்பான்மை மக்கள் உள்ள இந்து நாடு என்று அறிவித்து இருக்கணும் எதுவும் செய்யாமல் விட்டத்தின் விளைவு கண்ட நாயெல்லம் என் உணவை எப்படி அன்றே தீர்மானிக்கலாம் என்று கேட்க துவங்கி உள்ளனர்


saravanan
மே 14, 2024 09:15

முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருந்த காஷ்மீரின் அரசர் மகராஜா ஹரிசிங் ஒர் இந்து கந்தியா-பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த சமயத்தில் காஷ்மீர் எந்த நாட்டுடனும் இணையாமல் சுதந்திரமாக இருக்கவே தீர்மானித்தது நமது நாடும் அதை ஏற்றுக்கொண்டது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பில் ஈடுபட இந்தியாவின் உதவியை நாடினார் அரசர் ஹரிசிங் இந்தியாவின் ராணுவ உதவியைடுத்து நடந்த அரசியல் மாற்றங்களால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதாவது ஆசாத் காஷ்மீர் உருவானது இப்போது அங்குள்ள மக்களே இந்தியாவுடன் இணைய நடத்தும் போராட்டங்களை காணும் போது பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சிக்கு கிடைத்திருக்கும் பாராட்டு பத்திரமாகதான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்


Mahendran Puru
மே 14, 2024 08:00

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பஞ்சம் பட்டினியிலிருந்து தப்பிக்க கடந்த வருடங்களுக்கு மேலாகவே மக்கள் பிழைப்பு தேடி தினமும் அங்கிருந்து நம் பக்கம் வந்தவண்ணம் இருக்கின்றனர்


Prabahara Lingan
மே 14, 2024 06:26

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் முழு பகுதியாக மாறவேண்டும்


ASOK KR.
மே 14, 2024 05:59

இஸ்ரேல் தேசத்திடமிருந்து இந்தியா தெரிந்து கொள்ளவேண்டும் மீட்க வேண்டும்


ஆரூர் ரங்
மே 13, 2024 15:08

காஷ்மீர் சட்டசபையில் இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி தொகுதிகளுக்கும் இடம் ஒதுக்கி வைத்துள்ளார்கள்.என்றாவது ஒருநாள் அந்த இடங்களும் நிரம்பும்.


Lion Drsekar
மே 13, 2024 14:58

யாராக வந்தாலும் நல்லாட்சி புரிந்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது ஆனால் அளவுக்கு மீறி முடியாட்சியின் சர்வாதிகாரம் செய்தால் விதி தன விளையாட்டை செய்யும், வந்தே மாதரம்


தமிழ்வேள்
மே 13, 2024 14:36

நல்ல அமைதி மார்க்கம் ஒரே சுடுகாட்டு அமைதிதான் போல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை