உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரடி ஆதரவு வழங்குங்கள்!

நேரடி ஆதரவு வழங்குங்கள்!

தேர்தல்களில் பா.ஜ.,வை தோற்கடிக்க சமாஜ்வாதி, காங்கிரசுக்கு பதிலாக முஸ்லிம் சமூகத்தினர் ஒன்றிணைந்து, பகுஜன் சமாஜுக்கு நேரடி ஆதரவளிப்பது அவசியம். முந்தைய தேர்தல்களில், முஸ்லிம் சமூகத்தினர் சமாஜ்வாதிக்கு ஆதரவளித்தும், அக்கட்சி பா.ஜ.,வை தோற்கடிக்கவில்லை. மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்கடுமையாக எதிர்ப்போம்! கேரளாவில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்தினால், காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். இது, தேர்தல்களில் முறைகேடு செய்ய ஒரே வழி என்பதால், அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் கமிஷன் மூலம் பா.ஜ., முயற்சிக்கிறது. இது, ஜனநாயகத்திற்கு அவமானம். பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்.,எப்படி எதிர்ப்பர்? பிரதமர் மோடியை விமர்சிக்க, ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு வேறு எந்த காரணங்களும் அமையவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், நியாயமான தேர்தல் செயல்முறையின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எப்படி எதிர்க்க முடியும்? நலின் கோஹ்லி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ