உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.2,291 கோடி கல்வி நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை வழங்கக்கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: பி.எம். ஸ்ரீ, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

SVR
மே 22, 2025 12:26

இங்கு ஒரு சில அறிவிலிகள் உலா வருகிறார்கள். ஒவ்வொரு ஜி எஸ் டி வரி விதிப்பிலும் மத்திய அரசுக்கு சேர வேண்டிய பங்கு மற்றும் மாநிலத்திற்கு சேர வேண்டிய பங்கு என்று சரி சமமான விழுக்காட்டில் வரியை மக்களிடமிருந்து பெறுகிறார்கள். இது மொத்தமும் இந்த நாட்டின் கன்சாலிடேட்டட் ஃபண்ட் இல் வரவு வைக்கப்படும். இதில் மாநிலத்திற்கு சேர வேண்டிய பங்கு மொத்தமும் மாநிலத்திற்கு வந்து சேர்ந்து விடும். அதில் மத்திய அரசுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. மிச்சமுள்ள சரி சமமான மத்திய அரசின் பங்கிலிருந்து நாட்டின் பைனான்ஸ் கமிஷன் தீர்மானித்தபடி 42 விழுக்காடு பணம் நாட்டில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும் கன்சாலிடேட்டட் ஃபண்ட் இலிருந்து கொடுக்க படும். மீதமுள்ள 29 விழுக்காடு மொத்தமும் மத்திய அரசுக்கு சேர்ந்தது. அதை மத்திய அரசு தனக்கு உண்டான செலவினங்களை பூர்த்தி செய்த பின் உள்ள மிச்சத்தை நாட்டின் சம சீர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு அந்த பணத்திலிருந்து வெவ்வேறு திட்டங்களுக்கு செலவு செய்கிறது அதில் ஒன்றுதான் இந்த சமக்கிற சிக்ஷா திட்டம். கண்டிப்பாக இதை மத்திய அரசு என்ன சரத்துக்கள் சொல்கிறார்களோ அதன்படி வரி பணத்தை அந்த அந்த மாநிலங்களுக்கு கொடுப்பார்கள். மத்திய அரசின் பங்கிலிருந்து அவர்கள் கொடுத்தால் தான் உண்டு. அதெல்லாம் கோர்ட்டுக்கு அப்பாற்பட்டது. ஊருக்கெல்லாம் ஒரு வழி ஒண்ணரை கண்ணனுக்கு மட்டும் ஒரு வழி என்று கருதி கோர்ட்டுக்கு போனால் வேலைக்கு ஆகாது. கண்டிப்பாக திராவிஷங்கள் தோற்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு ஏற்றாற்போல் இந்த திராவிஷங்கள் பணம் வாங்க எழுதிய கடிதங்கள் எல்லாம் மத்திய அரசிடம் உள்ளது. அவையெல்லாம் இப்போது வெளியில் வந்து சந்தி சிரிக்க போகிறார்கள். அனாவசியமாக வக்கீலுக்கு பீஸ் கொடுக்கப்போகிறார்கள்.


Sankar Ganesh Shanmugam
மே 21, 2025 17:00

பார்க்கலாம் தமிழ் நாடு அரசு கொட்டு வாங்க போகிறதா இல்லை மத்தியஅரசு வாங்கப்போகிறதா என்று. யாரும் திட்டம் இல்லாமல் பணம் கொடுக்க மாட்டார்கள். ஆகா தமிழ் நாடு அரசு சரியான அடிவாங்க போகிறது


panneer selvam
மே 21, 2025 16:23

how you can demand money for the project which you have refused to implement ? Do not fool us


vbs manian
மே 21, 2025 16:04

உரிமை தொகைக்கு நிறைய புதிய விண்ணப்பங்கள். துண்டு விழுகிறதோ.


vbs manian
மே 21, 2025 16:03

இந்த நிதி எல்ல மாநிலங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் யாரும் கோர்ட்டுக்கு போகவில்லை. தவறு யார் பக்கம். உச்ச நீதிமன்றம் லோக்கல் கோர்ட் போல் எடுத்ததெற்கெல்லாம் அணுகப்படுகிறது.


K.n. Dhasarathan
மே 21, 2025 15:44

இப்போது மத்திய அரசு கொட்டு வாங்க போகிறது, முன்பு ஆளுநர் ரவி வழக்கமாக பல முறை குட்டு வாங்கி பெரும் பேரும் புகழும் பெற்றார், தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் கவர்னர்களுக்கு பெருமை சேர்த்தார், இப்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்று குட்டு வாங்கி நன்றாக மாநில அரசுகளை வளர்த்து விடுகிறார்கள், யார்தான் இப்படி யோசனை கூறி வழி நடத்துகிறார்கள்? பாவம் தர்மேந்திரா பிரதான், இப்போதான் ஒரு வழக்கில் மன்னிப்பு கேட்டார், இனி உச்ச நீதிமன்றம் சென்று, குட்டு வாங்கி , அகில உலக பேர் பெறுவார்.


Varadarajan Nagarajan
மே 21, 2025 15:06

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதாக கையெழுத்திட்டுவிட்டு முதல் சில தவணையை பெற்றுக்கொண்டு அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டேன், எங்களுக்கு இருமொழிக்கொள்கையும், மத்திய நிதியும் மட்டும்தான் தேவை மற்றபடி அந்த திட்டத்தில் சொல்லியுள்ள நிபந்தனைகளை ஏற்கமாட்டேன் என்று சொன்னால் யார் ஏற்பார்கள்? இந்த திட்டத்தை விடுங்கள் ஏற்பனவே உள்ள திட்டத்திற்கு ஒதுக்கிய மாநில நிதியை பயன்படுத்தி ஆசிரியர் சம்பளம் வழங்க எந்த தடையும் இல்லையே. அதை செய்ய முடியாமல் திண்டாடுவதால் உண்மையை மடைமாற்ற மத்திய அரசு நிதி வழங்கவில்லை என விளம்பர நடைபெறுகின்றது


Malarvizhi
மே 21, 2025 14:44

நீங்கள் பொருட்களை வாங்காமல் இருந்தால்தான் ஜிஎஸ்டி கட்டாமல் இருக்க முடியும். உங்களால் பொருட்களை வாங்காமல் இருக்க முடியுமா? ஜிஎஸ்டி வரி வருமானம் குறைந்தால், மாநில அரசுக்கு 73% வருவாய் இழப்பு என்று தெரியுமா அல்லது தெரியாதா?


SIVA
மே 21, 2025 12:51

சாமானியன் gst கட்ட வில்லை என்றாலே அது கிரிமினல் கேஸ் , இதுல மாநில அரசு gst கட்ட மாட்டேன் என்று சொன்னால் அதில் என்ன வழக்கு வரும் என்று தெரியவில்லை , gst வரியில் 70 % வரை மாநில அரசுக்கு கிடைக்கின்றது , வரியால் வரும் வருமானம் மாநில அரசுக்கு கெட்டபெயர் மட்டும் மத்திய அரசிற்கு இது தான் கூட்டாட்சி தத்துவோமோ ...


Sivagiri
மே 21, 2025 12:29

அப்போ , கல்வி வாங்குங்க - -


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை