உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மனநலனை பாதிக்கும் காற்று மாசு உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

 மனநலனை பாதிக்கும் காற்று மாசு உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி: 'டில்லியில் தொடரும் காற்று மாசு பிரச்னை உடல்நலனை மட்டுமின்றி மனநலனையும் பாதிக்கிறது, குறிப்பாக குழந்தைகள் அறிவுத்திறன் மற்றும் நினைவாற்றல் குறைபாடு, அரியவகை நோயான ஏ.டி.எச்.டி., எனப்படும் கவனச்சிதறல் நோய் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர்' என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தலைநகர் டில்லியில் காற்று மாசு அளவு சமீப ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. குறிப்பாக குளிர்காலமான அக்டோபர் -- பிப்ரவரி மாதங்களில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டுகிறது. மோசம் காற்றின் தரக்குறியீடு 50 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான நிலை, 50க்கு மேல் 200 வரை இருந்தால் நடுத்தர அளவு என, வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 350க்கும் மேல் பதிவாகி, மிகவும் மோசம் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், டில்லியில் காற்று மாசு உடல்நலத்துடன் மனநலத்தையும் கடுமையாக பாதிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, 'எமோநீட்ஸ்' என்ற உளவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை: காற்று மாசு பெரும்பாலும் நுரையீரலையே பாதிப்பதாக பலர் கூறுகின்றனர். ஆனால் மாசு அதிகம் உள்ள நாட்களில் பலர் எரிச்சல், அமைதியின்மை, மனச்சோர்வு, மன இறுக்கத்தை உணர்கின்றனர். உடல்நல பிரச்னைக்கு இணையாக மனநல பாதிப்பும் அச்சுறுத்தலாக உள்ளது. காற்று மாசுக்கும் அறிவுத்திறன் குறைவது, நரம்பியல் கோளாறுக்கும் தொடர்பு உள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள், முதியோர், ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கவனச்சிதறல் ஒருவர் காற்று மாசு சூழலில் நீண்டகாலமாக இருந்தால், அவருக்கு அல்சைமர் எனும் மறதி நோய், பார்கின்சன் எனும் நடுக்கம் போன்ற நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும். மாசு நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவு, நினைவாற்றல் பிரச்னை, ஏ.டி.எச்.டி., எனப்படும் கவனச்சிதறல் அதிகரிக்கும். காற்று மாசு உடலில் கார்ட்டிசால் எனும் ரசாயன அளவை உயர்த்தி, மனநிலையை பாதிக்கும். தொடர்ந்து இது நிகழும் போது நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ