உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் உற்சாகம்

கேரளாவில் பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் உற்சாகம்

பாலக்காடு; கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.கேரள மாநிலத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3ம் தேதி துவங்கியது. உயர் கல்விக்கு செல்லும் கனவில், படிப்பே கதியென இருந்த மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது.நேற்று, 10ம் வகுப்புக்கு உயிரியல் தேர்வும், பிளஸ் 2 வகுப்பிற்கு தத்துவம், கணினி அறிவியல், புள்ளிவிவரம், இதழியல் என பல்வேறு பாடங்களின் தேர்வும் நடந்தது. தேர்வு முடிந்ததும், மாணவர்கள் தங்களது சந்தோஷத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு கொண்டாடினர்.பிளஸ் 1 தேர்வு வரும் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. 9ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளின் தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 3 முதல் 11ம் தேதி வரையும், 21 முதல் 26ம் தேதி வரையும் இரு கட்டங்களாக நடக்கிறது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 3ம் தேதி முதல் துவங்கி, 26ம் நடக்கிறது. மே மாதம் மூன்றாம் வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை