உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கோரிக்கை

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கோரிக்கை

புதுடில்லி: தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தல் முதற்கொண்டு, அதன் பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bawz6etj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், தனது குற்றச்சாட்டுகள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்; ஓட்டு திருட்டு என்பது 'ஒரு நபர், ஒரு ஓட்டு' என்ற அடிப்படை ஜனநாயகக் கொள்கையின் மீதான தாக்குதலாகும். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டுமானால், போலி வாக்காளர்கள் இல்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அதனை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் ஆய்வு செய்யட்டும். votechori.in/ecdemand என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமோ, 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவோ, எங்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கலாம். இது ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

lana
ஆக 11, 2025 11:25

என் பெயர் முகவரி ஐ digital format இல் கேட்க ராகுல் க்கு என்ன உரிமை உள்ளது. இதை வேறு யாருக்கும் விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். நம்ம கரன்சி machine ஐ பாகிஸ்தான் க்கு விற்ற களவாணி தானே உங்கள் கட்சி.


Chess Player
ஆக 11, 2025 05:49

நீ பயித்தியம் பா. என்ன வேணும்நாளும் பேசுவ . வெப்சைட் ல இருக்கரதையா சும்மா திருப்பியும் கொடுன்னா எல்லோரும் உன்ன மாதிரி வேலை இல்லாதவங்கள? நீ தான் 56 வயது வரைக்கும் வேலையே பார்க்கல . எலேச்டின் கமிஷன் எல்லோரும் கஷ்டப்பட்டு படிச்சு வந்தவங்க


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 10, 2025 22:09

பாஸ் இவர் அமேதில ஜெயிச்சது கோல்மல் பண்ணி தான்,


Varadarajan Nagarajan
ஆக 10, 2025 22:03

பூத் கேப்ச்சரிங் முறையிலும் வாக்குப்பெட்டிகளை மாற்றும் முறையிலும் காங்., ஆட்சி நடந்தபொழுது தேர்தல் வெளிப்படையாக நேர்மையாக நடந்ததுபோலவும் தற்பொழுது இவிஎம் முறையில் முறைகேடுநடப்பதாகவும் கூறும் ராகுல்,போலி வாக்காளர்களையும் இறந்துபோனவர்களையும் சட்டவிரோத குடியேறிகளையும் வாக்காளர்பட்டியலில் சேர்த்தது தங்கள் கட்சியும் மற்றும் தங்களது கூட்டணி கட்சிகளுமா அல்லது தேர்தல் ஆணையமே தாமாக முன்வந்தா?


தாமரை மலர்கிறது
ஆக 10, 2025 20:51

வாக்காளரின் அனுமதியின்றி, அவரின் பெயர், விலாசத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. அது தனிமனித உரிமை மீறல். இதில் டிஜிட்டலில் வெளியிடுவது இன்னமும் மோசமான செயல். ஒருவரின் பெயர், விலாசத்தை வைத்து, அவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட முடியும். டிஜிட்டல் மோசடிக்கு ராகுல் முகத்தளம் அமைக்கிறார். இதை அனுமதிக்க முடியாது. தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் இனி யாருக்கும் கொடுக்க கூடாது. வேண்டுமெனில் கோர்ட்டுக்கு சென்று பெற்றுக்கொள்ளட்டும். வோட்டு திருட்டு என்று கதறுபவர்களுக்கு அவல் தீனி போடக்கூடாது. தேர்தல் ஆணையத்தை அவமானப்படுத்திய ராகுலுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.


Madhavan
ஆக 10, 2025 19:39

ஒட்டு போடும் இடத்தில் குறைந்த பட்சம் நான்கு அதிகாரிகள் சரி பார்க்கிறார்கள். அரசியல் கட்சி ஏஜெண்டுகளும் அங்கு தான் இருக்கிறார்கள். வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டுதான் ஒட்டு போட வருகிறார்கள். தோற்றவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாமல் தேர்தல் கமிஷன் மீது குற்றம் சொல்வது சரியல்ல. இதே சிஸ்டத்தில்தான் ராகுலும் அவர் சகோதரியும் ஜெயித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லாவிடில் ராஜினாமா செய்யட்டும்.


Chess Player
ஆக 10, 2025 19:19

இது எலெக்ஷன் கமிஷன் வெப்சைட் ல ஏற்கனவே இருக்கிறது . உம்மை மாதிரி எல்லாரும் வேலை இல்லாதவங்களா?


மனிதன்
ஆக 10, 2025 19:10

தன்மீது தவறில்லை என்றால் தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடட்டும்...இங்கே கருத்து என்று கதறிக்கொண்டிருப்பவர்கள், தேர்தல் ஆணையத்திடம் நம் நிரபராதித்துவத்தை நிரூபிக்க அதை வெளியிடுமாறு கோரிக்கை வைக்கலாம்...உங்களுக்கு சுயமாக சிந்திக்கத்தான் முடியவில்லை அவர் சொல்வதையாவது அறிவுபூர்வமாக சிந்தித்துப்பார்க்கலாம்....கதறி என்ன பிரயோஜனம்???


vadivelu
ஆக 10, 2025 20:05

அதான் அவிங்க தளத்தில் இருக்கே , என்னண்னு புரியாம சொல்றீங்க. லிஸ்ட்– ஆ வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்.


vivek
ஆக 10, 2025 20:58

நீ தான் தைரியமான ஆளச்சே...அவுங்க கையெழுது போட்டு குடு


Ashok Subramaniam
ஆக 10, 2025 21:05

அது சரி.... பப்பு தினமும் ஏதாவது உளறுவார்...இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதுதான் எல்லோருக்கும் வேலையா? பப்புவைக் கண்மூடித்தனமாக நம்பும் சிலருக்கு வேண்டுமான்ல் அவர் கேட்பவையெல்லாம் நியாயமாகப் படலாம்...ஆனால் அவரது லோக்சபை நடவடிக்கைகள் மற்றும் தாந்தோன்றித் தனமான பேச்சுகள் எல்லாம் ஒரு தரமான, பொறுப்பான எதிர்கட்சித் தலைவரைப் போலவா இருக்கின்றன.. மோடி என்கிற மனிதரின் மேலுள்ள வெறுப்பே, வன்மமே இவரது அரசியல் அவலங்களின் அடித்தளம்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 10, 2025 22:07

யோவ் வடிவேலு அவன் மதராச டிகிரி, அவனுக்கு புரியாது விடு


Ganapathy
ஆக 11, 2025 02:59

இந்த உத்தமன் தனது சீன அடிமை ஒப்பந்த விபரத்தை ஏன் வெளியிட்டானா மொதல்ல? வெளியிட்டு பார்லியில் பேசட்டுமே...டோக்லாம் மோதல் நேரத்தில் இவன் ஏன் சீன உளவாளிகளை சந்தித்தான் என மக்களிடம் விளக்கட்டும்... ...மக்கள் எல்லாரும் உன்னைப் போல உனது ஊழல் காந்தி போல கூமுட்ட பெயிலு பப்பு இல்லை மூர்க்க மனிதனே...


Anantharaman
ஆக 10, 2025 18:58

நீங்க யார் கோரிக்கை விடுக்க. திருட்டுக் கும்பல் கர்நாடகா, உபி யில் செய்த மச்சங்கள் மக்கள் மறந்தாலும் தேர்தல் ஆணையம் நினைவு கூரும்.


Ganapathy
ஆக 10, 2025 18:56

இவர் மீதுள்ள பல வழக்குகளில் இவர் பெயில் உத்தரவை மீறியுள்ளான்? ஏன் அதன்மீது நடவடிக்கையில்லை? இவன் செய்யும் எதையும் ஒரு சாதாரண நபர் செய்தால் இந்த மத்தியரசும் சிபிஐ தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் என எல்லா ஜனநாயக அமைப்புகளும் மன்னித்து வாளாவிருக்குமா?


முக்கிய வீடியோ