உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரக்கு வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

சரக்கு வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

கார்வார் : துறைமுகத்தில் துாங்கி கொண்டு இருந்தபோது, சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.ஹாவேரியை சேர்ந்தவர் ஹனுமந்த் வத்தார், 27. உத்தர கன்னடா கார்வாரில் தங்கி இருந்து, கார்வார் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், துறைமுக சாலையில், ஹனுமந்த் வத்தார் துாங்கி கொண்டு இருந்தார். நேற்று காலையில் துறைமுகத்திற்கு மீன் லோடுகளை ஏற்ற, ஒரு சரக்கு வாகனம் வந்தது. டிரைவர் வாகனத்தை, 'ரிவர்ஸ்' எடுத்த போது, துாங்கி கொண்டிருந்த ஹனுமந்த் வத்தார் மீது ஏறி இறங்கியது. உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சரக்கு வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை