மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
9 hour(s) ago
பெங்களூரு, : பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகனுக்கு ஆதரவாக, புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோர் நேற்று ஓட்டு சேகரித்தனர்.கர்நாடகாவில், முதல்கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் இன்றுடன் பகிரங்க பிரசாரம் ஓய்வதால், அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகனுக்கு ஆதரவாக தினமும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டு சேகரித்தனர்.நேற்று முன்தினம் ஒரே நாளில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். நேற்று காலை காந்திநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆர்.டி., தெரு, பி.வி.கே.அய்யங்கார் சாலையில் 'ரோடு ஷோ' நடத்தினார்.இதில், புதுச்சேரி உணவுத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், பெங்., சென்ட்ரல் பா.ஜ., தலைவர் சப்தகிரிகவுடா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.மாலையில், சாம்ராஜ்பேட் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.ஆர்.மில், பஞ்சமுகி ஆஞ்சநேயா கோவிலில் பூஜை செய்த பின், ரோடு ஷோ நடத்தப்பட்டது.இதில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அம்மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி, எம்.எல்.ஏ., ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், பா.ஜ., பிரமுகர்கள் நாகலிங்கம், சக்கரபாணி உட்பட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.அப்போது பி.சி.மோகன் பேசியதாவது:மத்திய பா.ஜ., அரசின் திட்டங்களால், ஏழைகளின் வாழ்வில் ஒளிவீசியுள்ளது. நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது. தொழில் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.புகையில் அவதிப்பட்ட பெண்களுக்கு இலவச சமையல் காஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. வங்கி கணக்கு என்னவென்றே தெரியாதவர்களுக்கு 'ஜன்தன்' வங்கி கணக்குகள் துவங்கி, அரசின் திட்டங்களை நேரடியாக செலுத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago
6 hour(s) ago | 1
6 hour(s) ago
9 hour(s) ago