உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டத்தில் பலியான 21 வயது விவசாயி: ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு

போராட்டத்தில் பலியான 21 வயது விவசாயி: ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு

சண்டிகர்: டில்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின்போது உயிரிழந்த 21 வயதான சுபாகரன் சிங் என்ற விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார்.வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்துவதுடன் கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.பஞ்சாப் அருகே கானெரியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான சுபாகரன் சிங் என்ற விவசாயி தலையில் குண்டடி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை மறுத்துள்ள போலீசார், விவசாயிகள் மிளகாய் பொடி தூவியதில், 10 போலீசார் காயம் அடைந்ததாக குற்றம்சாட்டினர்.இந்த நிலையில் பஞ்சாப் விவசாயி சுபாகரன் இறந்தது வருத்தமளிப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த்சிங் மான் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண தொகை அளிப்பதாவும், சுபாகரன் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

J.V. Iyer
பிப் 24, 2024 07:04

இது காவாலித்தனம். திருட்டுத்தனம். மக்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.


நரேந்திர பாரதி
பிப் 24, 2024 04:03

அவன் விவசாயின்னு யாருடா சொன்னாங்க? திருட்டு திராவிட பாணியில் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் கூடுன கூட்டம்தான் அது இந்த ஆம் ஆத்மீ தீயமூகாவை விட நாட்டுக்கு ஆபத்தான கட்சி...விரைவில் திராவிஷம் போலவே வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கப் பட வேண்டியது...காலிஸ்தான் காலிக் கும்பல்களின் பின்னணியில் இயங்குகிறது


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 23:43

ஊரான் ஊட்டு நெய், என் பொண்டாட்டி கையு என்ற ரீதியில் ஒட்டு வங்கி அரசியல் செய்கிறது ஆம் ஆத்மீ கட்சி.


R. Vidya Sagar
பிப் 23, 2024 21:55

அப்பன் வீட்டு காசு


sankaranarayanan
பிப் 23, 2024 21:30

யார் பணமோ கண்ணா எடுத்து வீசு சும்மா- இருப்பது கொஞ்ச காலம்தான் அதற்குள்ளாகவே முடிந்தமட்டும் கஜானாவை சூறையாடி மாநிலத்தை போண்டியாக்கிவிட்டு போயிடு அப்பொறம் யார் வருவாரோ யாருக்குத்தெரியும் இதுதான் அரசியவாதிகளின் சித்தாந்தான்தம்


Yaro Oruvan
பிப் 23, 2024 21:10

நம்மூர் திராவிஷம் சாவில் அரசியல் செய்யும்.. போர்ஜரிவால் அதை அங்கனயும் செய்றான்.. சகவாக்ஷ தோஷம்.. எல்லாத்தயும் ஒத்துக்கலாம்.. அந்த ரவுடி கும்பலை விவசாயின்னா?? அப்ப நம்மூர்ல விவசாயம் செயறவங்கள எப்படி கூப்பிடறது ?


kulandai kannan
பிப் 23, 2024 20:35

பஞ்சாப் விவசாயிகள் ஏன் மாநில அரசுக்கு எந்த கோரிக்கையும் வைப்பதில்லை.


VENKATASUBRAMANIAN
பிப் 23, 2024 19:03

எவனும் விவசாயி இல்லை. எல்லோருக்குமே புரோக்கர்கள்


panneer selvam
பிப் 23, 2024 18:48

Any death is to be mourned . A loss for dear and near . Here the question is what post mortem report mentioned as cause of death ? No bullet is fired by police . is he died due to gun shots ? A through investigation will throw more lights on the cause of death ?


பேசும் தமிழன்
பிப் 23, 2024 18:45

எங்கள் ஊரில் விவசாயி என்றால்... மேலே சட்டை போடாமல்... சாதாரண கீலுடை அணிந்து இருப்பார்கள் ....இங்கே விவசாயி ....அடிடாஸ் t-shirt pottu கொண்டு இருக்கிறார் ???


பேசும் தமிழன்
பிப் 24, 2024 01:22

இதே எங்கள் ஊராக இருந்தால்..... எவன் அப்பன் வீட்டு காசை கொடுக்குறீர்கள் என்று கேட்டு இருப்பார்.... சின்னவரு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை