வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Sir wates
தினமலரில் மக்காச்சோளம் பயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்
சண்டிகர்: அதிக மகசூல் தரும் பிஎம்எச் 7 ரக கலப்பின மக்காச்சோள பயிரை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்காச்சோளத்தை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் தொழில்நுட்பம், தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால், மக்காசோளத்தின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தவிர தீவனம், சத்துமாவு, உணவு உள்ளிட்டவற்றின் தேவைக்காக, அவை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிக மசூல் தரும் பி.எம்எச்.17 கலப்பின மக்காச்சோளம் பஞ்சாபில் அறிமுகப்படுத்தபடடுள்ளது. 'இரண்டாவது நெல்' ஆக இதனை அம்மாநில விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ளனர். இது குறித்து பஞ்சாப் விவசாய அமைச்சர் கூறியது, இந்த கலப்பினத்தின் குறிப்பிட்ட நடவு நேரம் மற்றும் குறுகிய முதிர்வு காலம் , வளரும் பருவத்தில் அறுவடைகளை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும்' என்றார்.பஞ்சாபின் வேளாண் இயக்குநர் கூறியது, ஒரு ஏக்கருக்கு சராசரியாக 25 குவிண்டால் மகசூல் தரும் இந்த கலப்பினமானது, அதிக ஸ்டார்ச் காரணமாக எத்தனால் உற்பத்திக்கு மிகவும் பொருத்தமானது. இந்த கலப்பினத்தை மே மாத இறுதிக்கும் ஜூன் மாத இறுதிக்கும் இடையில் விதைக்கலாம். இதன் முதிர்வு காலம் 96 நாட்கள் ஆகும் என்றார்.மாநிலத்தின் விவசாய வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய வகையில், விவசாயிகள் பயனடைந்து வரவிருக்கும் பருவத்தில் விதைகளை சரியான நேரத்தில் சாகுபடி செய்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
Sir wates
தினமலரில் மக்காச்சோளம் பயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்