உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் கைது: பஞ்சாப் போலீசார் அதிரடி

பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் கைது: பஞ்சாப் போலீசார் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் செயல்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 13 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இது தொடர்பாக டிஜிபி கவுரவ் யாதவ் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தடை செய்யப்பட்ட பாபர் கால்சா சர்வதேச அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஒருவன், பிரான்சை சேர்ந்த சத்னம் சிங் மற்றொருவன் கிரீசை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் ஆகியோர் கைதாகி உள்ளனர். பஞ்சாபில் நிலவும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சித்தவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், 5 கிலோ எடை கொண்ட டெட்டனேட்டர்கள், 2 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள், பிஸ்டல், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஏப் 20, 2025 06:59

ஆர்டிஎஃஸ் கூட பிடிபடுகிறது என்றால் இவர்கள் மகா ஆபத்தானவர்கள்..


Barakat Ali
ஏப் 20, 2025 06:01

டுமீல் நாடு பாதுகாப்பானது அவர்களுக்கு ...


வாய்மையே வெல்லும்
ஏப் 20, 2025 05:54

ஒரே ஒரு ஆளு ஜார்ஜ் சோரோஸ் என பெயர் உங்கள் நண்பன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் கிட்ட சொல்லிட்டு அவரை நன்கு ஜெயிலில் வைத்து சாட்டையால் கவனிக்க சொல்லுங்க. உலகில் பாதி பயங்கரவாதிகள் வேலை இல்லாமல் தெருத்தெருவாக பிச்சை எடுப்பார்கள் நம்மூரு ராவுளும் அதில் அடக்கம். மாடல் பாய்ஸ் பொங்கி எழ வேணாம். அப்படியே பொய்ங்கினால் ஓரமாக போயிட்டு பலூன் குச்சிமிட்டாய் வைத்திருக்கிறன் அதைக்கொண்டு விளையாடிட்டு போங்க. அப்படியே பிரசுரிக்கவும் சார் நீங்க நல்லா இருப்பேங்க ,


thehindu
ஏப் 19, 2025 23:19

இனியும் தீவிரவாதம்... தீவிரவாதிகள்... குறையவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை