உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை

பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் உள்ள ஒரு காட்டில் இருந்து, பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் போலீசார் மிகப்பெரிய சதி செயலை முறியடித்துள்ளனர். இது குறித்து பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் உள்ள ஒரு காட்டில் நடந்த சோதனையில் கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கையின் போது, பயங்கரவாத சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்பு உடன் தொடர்பில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பஞ்சாப் போலீசார் தேசிய பாதுகாப்பையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உறுதி பூண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 06, 2025 10:41

நம்ம வண்டியெல்லாம் முப்பதுநாள் லேட்டா வருது வேறொண்ணுமில்ல


புதிய வீடியோ