உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி., அபாரம்

பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி., அபாரம்

சண்டிகர்: பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., இரண்டாவது முறையாக தலைவர் பதவியை வென்றுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில், பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யை சேர்ந்த அங்கித்பிதான் 3149 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழக வரலாற்றில் ஏ.பி.வி.பி., அமைப்பு தொடர்ந்து இரண்டாவது முறை தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது இதுவே முதல்முறை. ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.எஸ்.ஏ.பி.,யி-ன் அடில் பிரார் இவரை விட 512 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார். இத்தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் மாணவர் அமைப்பு ஆதரவு அளித்தது. இது வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ரீதியாக புதிய கூட்டணி குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கரப்பான் பூச்சி கட்சியினர் ஆம் ஆத்மி ஆதரவுடன் இயங்கி வந்தாலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும், கரப்பான் பூச்சி இயக்கத்தினருக்கும் தற்போது செல்வாக்கு இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

bharathi
செப் 02, 2026 08:28

ABVP must all the other students union to revamp the dirty politics in the student segment


raja
செப் 02, 2026 06:56

மாணவர்களுக்கு படிக்கும் போது அரசியல் கூடாது என்பதே என் கருத்து.இதனால் தான் உண்டி குலுக்கி கட்சி மாணவர்களை மூளை சலவை செய்து நஸ்சல் பாரிகளாக மாற்றி விடுகிறது தமிழகத்தில் கூட சில மாணவர்கள் எஸ் எப் ஐ என்று கூறி கொண்டு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கிட்டும் ஒழுங்கு சரியில்லை ஆகையால் மோடி அரசை வீழ்த்துவோம் என்று தஞ்சை புதீய பேருந்து நிலையத்தில் நரம்பு புடைக்க பேசி உண்டியலில் பயணிகளிடம் வசூல் செய்கிறார்கள் நானே பலமுறை பார்த்து உள்ளேன்... பாவம் அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு மாநில அரசிடம் உள்ளது என்று கூட தெரிய வில்லை...


sankaranarayanan
செப் 02, 2026 05:35

பஞ்சாப்பில் விரைவில் மோடியின் பா ஜ. பா அரசுதான் அடுத்த ஆண்டு அரசு அமைக்கும்


mindum vasantham
செப் 02, 2026 05:31

பழமைவாதிகள் முன்னேற்றம் இருக்காது


SUBBU,MADURAI
செப் 02, 2026 05:03

என்னவொரு வெற்றி! பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ABVP தலைவர் பதவியை வென்றுள்ளது. இவர்களது இந்தப் போராட்டங்கள் மற்றும் வெற்றிகள் அனைத்தும், கெஜ்ரிவால் பஞ்சாபை இழந்து வருகிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். விரைவில் பஞ்சாபில் பாஜகவின் ஆட்சி மலரும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ