உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்புடன் பேசிய விஷயங்கள் மோடியிடம் பகிர்ந்தார் புடின்

டிரம்புடன் பேசிய விஷயங்கள் மோடியிடம் பகிர்ந்தார் புடின்

புதுடில்லி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடத்திய பேச்சு குறித்த விபரங்களை, பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பகிர்ந்து கொண்டார். 'நேட்டோ' எனப்படும் ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போர் தொடுத்தது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன. உக்ரைன் உடனான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15ம் தேதி பேசினார். அமெரிக்காவின் அலாஸ்கா வில் நடந்த பேச்சில் எந்த முடி வும் எட்டப்படவில்லை. இந்நி லையில், டிரம் புடனான பேச்சு குறித்த தகவல்களை , பிரதமர் நரேந்திர மோடியிடம், தொலைபேசி வாயிலாக அதிபர் புடின் நேற்று பகிர்ந்து கொண் டார். இ து குறித்து பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் கூறுகையில், 'என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அலாஸ்காவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்த தகவலை பகிர்ந்த என் நண் பரான ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி. 'உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். நம் தொடர்ச்சியான பேச்சு, பரிமாற்றம் வரும் நாட்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்' என, தெரிவித்துள்ளார். இருப்பினும், டிரம்ப் - புடின் இடையே நடந்த பேச்சு குறித்த விபரங்களை பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tamilan
ஆக 19, 2025 23:20

வியாபாரிகள் வியாபாரிகளின் ஏஜெண்டுகளிடம் பேசுகிறார்கள்


Ganesh
ஆக 19, 2025 18:55

ரெண்டு பேருமே மிகவும் புத்திசாலிகள் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளர்கள்... உக்ராயின் மீதும் அழுத்தம் குடுத்தாகி விட்டது.. டிரம்ப் யும் முட்டளாக்கி விட்டார்கள்.... இப்பொழுது என்ன பேசி இருப்பார்கள் என்றால் உக்ராயின் ப்ரொப்லெம் முடிந்தவுடன் எப்படி அமெரிக்கா வை முழுவதுமாக முழுகடிக்கலாம் என்பதை பற்றியும்,அதை பற்றி சீனாவிடம் என்ன பேச வேண்டும் என்பதை பற்றியும் பேசி இருக்கலாம்...


V RAMASWAMY
ஆக 19, 2025 15:05

Real friends.


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:41

சும்மா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை