உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற விவகாரம்: லாலு மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற விவகாரம்: லாலு மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலங்களை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.கடந்த 2004 - 09 ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் ‛ டி ' பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் வேலை தருவதாக கூறி, அதற்கு லஞ்சமாக நிலங்களை குறைந்த விலைக்கு பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்நிலையில் இந்த வழக்கில், டில்லியில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், லாலு பிரசாத் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, லாலு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான அமித் கத்யால் உள்ளிட்டவர்கள் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு விசாரணையை வரும் 16 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்த வழக்கில், அமித் கத்யால் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத், மகன் தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இன்னும் ஆஜராகவில்லை.லாலு குடும்பத்தினர் மீது சி.பி.ஐ.,யும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜன 10, 2024 00:57

நம் நாட்டின் விசித்திரம் என்னவென்றால், ஊழல் செய்தவர்களுக்கும், லஞ்சம் வாங்கியவர்களுக்கு, மற்றும் பல கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுக்கும், அவர்கள் மீது 'வெறும்' குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கே பல வருடங்கள் நமது நீதிமன்றம் எடுக்கும். பிறகு வழக்கு பதிவு, விசாரணை என்று பல வருடம் அவர்கள் மீது வழக்குகள் நடக்கும், சாரி, நொண்டும். தீர்ப்பு வருவதற்குள் அவர்கள் வயது முதிர்ச்சி அடைந்து இயற்கை மரணம் அடைந்துவிடுவார்கள். வெட்கம். வேதனை. அவலம்.


தாமரை மலர்கிறது
ஜன 09, 2024 20:03

பீகார் கருணாநிதி லாலுவின் ஊழல் குடும்பம்.


Palanisamy Sekar
ஜன 09, 2024 16:45

இந்திய புள்ளி கூட்டணியில் அடுத்த ஊழல் கொடூர குடும்பத்தின் லட்சணம் இது. இப்படிப்பட்ட ஊழல்களை சுமந்துகொண்டுதான் அவர்கள் நேர்மையான மோடிஜியை பற்றி கேவலம் பேசி வீழ்த்த நினைக்கின்றார்கள். இங்கேயும் ஒருத்தர் மோதிக்கொண்டுள்ளார்.கருப்புக்கண்ணாடி போட்டுகொண்டாள் யாருக்கும் தெரியாது என்கிற நினைப்பில் உள்ள இந்த கொள்ளையர்களை நிரந்தரமாக உள்ளேயே தள்ளவேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ