உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துமகூரில் ஓட்டப்பந்தயம்: இன்று வீரர்கள் தேர்வு

துமகூரில் ஓட்டப்பந்தயம்: இன்று வீரர்கள் தேர்வு

துமகூரு: : துமகூரு மாவட்ட அத்லெடிக் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டி 2025, ஜனவரி முதல் வாரம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட அணியினர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது, ஆண்கள், பெண்களுக்கான போட்டியாகும்.நடுத்தர வயது ஆண்கள், பெண்களுக்கு 10 கி.மீ.,; 20 வயது இளைஞர்களுக்கு 8 கி.மீ.,; 18 வயது இளைஞர்கள், இளம் பெண்களுக்கு, 6 கி.மீ.,; 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு 2 கி.மீ., ஓட்டப்பந்தயம் நடக்கவுள்ளது.போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் பணிகள், இன்று காலை 6:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கவுள்ளது. ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள், வயது உறுதி சான்றிதழ், ஆதார் கார்டு உட்பட தேவையான ஆவணங்களுடன் பயிற்சியாளர் சிவபிரசாத்தை சந்திக்க வேண்டும். கூடுதல் தகவல் வேண்டுவோர், 99645 29176 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ