உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு

தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் முதலில் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுமத்தி வருகிறார். ஓட்டு திருட்டு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி வந்த அவர், இன்று சில ஆதாரங்களை வெளியிடுவதாகக் கூறி செய்தியாளர்களை சந்தித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5jlsjman&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது; ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாக்கிறார். தேர்தலுக்கு முன்பும், பிறகும், யாரோ சிலர், நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதை திட்டமாக வைத்துள்ளனர். குறிப்பாக, எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஓபிசி மக்களை குறி வைத்து நீக்குகின்றனர். இதற்கு 100 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. நான் என்னுடைய நாட்டையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நான் மதிக்கிறேன். ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் முடிவு செய்யுங்கள். கர்நாடாகவின் ஆலந்த் தொகுதியில் 6,018 ஓட்டுகளை நீக்க முயற்சி செய்தனர். எதிர்பாராதவிதமாக சிக்கி விட்டனர். மென்பொருள் மூலமாக ஓட்டுகளை நீக்குவதற்காக ஆட்டோமெட்டிக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களின் எண்கள் கர்நாடகா அல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்தது. காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர். சூர்யகாந்த் என்பவர் 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை நீக்கியுள்ளார். நாகராஜ் என்பவர் வெறும் 36 விநாடிகளில் இரு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளார். இது மனிதர்களால் சாத்தியமில்லாத ஒன்று. சாப்ட்வேர் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணை உள்ளீடு செய்து, அனைத்து பூத்களிலும் அதே எண்ணில் உள்ள வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். காங்கிரஸ் பலமாக உள்ள டாப் 10 பூத்களில் பெரும்பாலான வாக்காளர்கள் நீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 10 பூத்களில் 8ல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. கர்நாடகா சிஐடி போலீஸ் 18 மாதங்களில் 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. அதில், இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட ஐபி முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்டது. ஆனால், டில்லி தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏன் அவர்கள் கொடுக்கவில்லை? இவர்கள் தான் அந்த செயலை செய்துள்ளனர். வாக்காளர் முறைகேடு தொடர்பாக 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் முதல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடைசியாக 2025ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதினர். ஆனால், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுவே, இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாப்பதற்கு சான்றாகும். வாக்காளர்களை சட்டவிரோதமாக நீக்கியது யார் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். இந்த விபரங்களை அவர்கள் வெளியிட மறுத்தால், ஜனநாயகத்தை கொலை செய்பவர்களை பாதுகாப்பதற்கு சமம். கர்நாடகா மாநிலம் ஆலந்த் தொகுதியில் நடந்த முறைகேடுகளைப் போலவே, மஹாராஷ்டிராவின் ராஜூராவில் நடந்துள்ளது. ஆலந்த் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ராஜூராவில் 6,850 வாக்காளர்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டை தான் கர்நாடகா, மஹாராஷ்டிராவில் செய்து வருகிறார்கள். ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே வாக்கு திருட்டை செய்து முடித்து விட்டார்கள். ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முதலில் நிறுத்த வேண்டும். ஓட்டு திருட்டு தொடர்பாக கர்நாடகா சிஐடி போலீசார் கேட்கும் விபரங்களை டில்லி தேர்தல் ஆணையம், ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும், இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Saai Sundharamurthy AVK
செப் 18, 2025 21:05

கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் வெற்றி பெற்றதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஆர். பாட்டீல் என்பவர் தான். ஆக தன் கட்சியை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியே வாக்குத் திருட்டில் ஈடுபட்டது என்று ராகுல் காந்தி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா ???? அநேகமாக நாட்டு நடப்பு தெரியாத ராகுலை கலாய்ப்பதற்காகவே அவரது ஆதரவாளர்கள் தவறான தகவல்களை அவரிடம் கொடுத்து விளையாடிப் பார்க்கிறார்களா ????


தாமரை மலர்கிறது
செப் 18, 2025 18:53

உலகிலேயே நேர்மையான நாணயமான தேர்தல் ஆணையம் இந்தியாவுடையது என்று பல ஐநா அமைப்புகள் சான்றிதழ்கள் கொடுத்துள்ள பெருமைபெற்றுள்ள தேர்தல் ஆணையத்தை ராகுல் சர்வசாதாரணமாக தூற்றுகிறார். எந்த எவிடென்ஸ்ம் கொடுக்காமல், பொய்களை பரப்புகிறார். இவர் மீது கேஸ் போட்டு, பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை உடனடியாக குஜராத் கோர்ட்டில் கொடுக்கப்படவேண்டும்.


c.mohanraj raj
செப் 18, 2025 16:08

தேர்தல் கமிஷன் இந்தியாவில் மட்டும் தான் உள்ளது போல குறை சொல்பவர்கள் அதை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள் முன்பே இவர்கள் நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த கட்சியை தடை செய்ய வேண்டும் ஏன் அதிகாரம் இல்லையா டி என் ஸ்டேஷன் தெரியுமா அவர் இருந்திருந்தால் தெரியும் இந்நேரம்


M Ramachandran
செப் 18, 2025 16:06

நல்ல நேரமிது நழுவ விடாதெ. தான் மாட்டிக்க வரும் எலி. புடிச்சி உள்ளேயா தள்ளும் வழியை பாரு.


Sridhar
செப் 18, 2025 15:35

சும்மா சொல்லக்கூடாதுய்யா... புள்ள என்னமா புட்டு புட்டு வைக்குது வடிவேலு ஆணித்தரமா டெலிபோன் பூத் காரன்கிட்ட ஏன் கோடு போட்டனு தெளிவா கேட்ட மாதிரியே கேக்குது பா


lana
செப் 18, 2025 15:18

இங்கு கருத்து எழுதும் கந்தசாமி கள் தேர்தல் ஆணையம் வேண்டுமானால் தவறு நடக்கவில்லை என்று ஆதாரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். சரி இப்போது கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் நாளைக்கு பொழுது போகலாம் எல்லாரும் குற்றம் சொல்லிட்டு போகும் போது தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துமா இல்லை ஊர் ஊராக பதில் செல்லுமா. சரி கர்நாடகா வில் காங்கிரஸ் ஆட்சி தானே இருக்கிறது. தேர்தல் ஆணையம் க்கு என்று குறைந்த ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் மாநில வருவாய்த் துறை அதிகாரிகள். அப்போது தப்பு செய்வது யார்


MARUTHU PANDIAR
செப் 18, 2025 15:02

இப்போ என்ன தான் பிரச்சினை ன்னு இங்கு ஒருத்தர் அப்பாவியா கேட்கிறார். பட்டாயா பாட்டாயா னு ஒண்ணு இருக்கு. அங்க போய் இந்தாளு "ரிலாக்ஸ்" பண்ணி ரொம்ப நாளாச்சு போல. இப்ப தாம் பெரிய ஜனநாயகத்தின் எதிர் கட்சி "தலீவுரு" ஆக்கி வச்சிருக்காங்கல்லா ?


Anbuselvan
செப் 18, 2025 14:38

இவர் மீது தேர்தல் கமிஷன் ஏன் வழக்கு தொடுக்க கூடாது


P Karthikeyan
செப் 18, 2025 14:27

பெரிய இடியே தலையில விழப்போகுது ...


S SRINIVASAN
செப் 18, 2025 14:21

some people blindly supporting, CEC is under President office