உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை: ராகுல் பங்கேற்பு!

பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை: ராகுல் பங்கேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்றுள்ளார்.பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தேடிச்சென்று அழிப்போம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ajw5wot9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி பயங்கரவாதிகளை துாண்டி விடும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சிந்து நதி நீர் ஒப்பந்தம் முறிவு, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என்பதை தொடர்ந்து, போர் பாதுகாப்பு ஒத்திகைகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முப்படை தளபதிகள், மூத்த அமைச்சர்கள், பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தாக்குதல் நடத்துவதற்கான முழு சுதந்திரத்தை முப்படைகளுக்கு வழங்கியுள்ளார்.இதன் அடுத்த கட்டமாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இன்று பிரதமர் அலுவலகம் சென்றார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த, சி.பி.ஐ., அமைப்பின் அடுத்த தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் பங்கேற்றார்.பாகிஸ்தான் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramalingam Shanmugam
மே 06, 2025 12:54

அவரே ஒரு கோமாளி... அவரை கூட்டி கொண்டு போய் என்ன செய்யப் போகிறீர்கள்..... உள்ளதையும் கெடுத்து விடுவார்.


Kasimani Baskaran
மே 06, 2025 04:06

பிரதமரை ராகுல் மிரட்டல் என்று சூரிய தொலைகாட்சி செய்தி வெளியிடும். இதெல்லாம் தேவையா? வேண்டுமென்றால் தவறான தகவல்களை கொடுத்தால் அதை சீனாவிடம் விரைவில் கொண்டு போய் சேர்ப்பார் அல்லது லண்டன் கூட்டாளிகளிடம் தெரிவிப்பார். பொறி வைத்து பிடிக்க வேண்டும்.


பேசும் தமிழன்
மே 05, 2025 22:28

அவரே ஒரு கோமாளி... அவரை கூட்டி கொண்டு போய் என்ன செய்யப் போகிறீர்கள்..... உள்ளதையும் கெடுத்து விடுவான்.


ராமகிருஷ்ணன்
மே 05, 2025 22:11

ராவுலு க்கு முக்கியத்துவம் தருவது தேவையற்றது. ஒரு வேளை பாக்கிஸ்தானுக்கு போக வேண்டிய செய்தியை பேசினார்களா, இருக்க வாய்ப்பு உண்டு.


பாமரன்
மே 05, 2025 22:09

நான் கூட எதோ பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தான் எதிரி கட்சியின் நாலெட்ஜுக்கு கொண்டு போறாரோ ஜி அப்பிடின்னு தப்பா நினைச்சேன்... கடைசீல சிபீபீபீபீ செலக்சனாம்ல... ஒரு செவுரு கட்டி யாரு நல்லா ஏறி குதிக்கறாங்கன்னு பார்த்து அப்பார்ட்மெண்ட் ஆர்டர் குடுத்துட வேண்டியது தானே?


V Venkatachalam
மே 05, 2025 22:09

கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?


RAJ
மே 05, 2025 21:46

அதுவும் சரி. அப்போதான் விஷம் கசியும்.. இது ஒரு யுக்தி ... பலே வெள்ளையத்தேவ ....


Iniyan
மே 05, 2025 21:38

இந்த பாகிஸ்தான் ஆதரவாளனிடம் போர் பற்றி விவாதிக்க மோடி ஒன்றும் சாதாரண ஆள் அல்ல.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 05, 2025 20:36

சிபிஐ தலைவரை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்கட்சித் தலைவர் மூவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டம். அவ்வளவுதான். போர் விவகாரமெல்லாம் இவரிடம் பிரதமர் விவாதிக்க மாட்டார்.


GoK
மே 05, 2025 20:32

கட்டுச்சோத்து மூட்டையில் யாரவது பெருச்சாளியை வெச்சு கட்டுவாங்களா?


முக்கிய வீடியோ