உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது, சில கோடீஸ்வரர்களுடன் நடக்கும் போர்: ராகுல்

இது, சில கோடீஸ்வரர்களுடன் நடக்கும் போர்: ராகுல்

மும்பை: ''மஹா., சட்டசபை தேர்தல் சித்தாந்தங்களுக்கும், சில கோடீஸ்வரர்களுக்கும் இடையே நடக்கும் போர்,'' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார். மஹா.,வில் நவ.,20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பல்வேறு திட்டங்கள் ஒரு நபருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் வகுக்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் டெண்டர்கள் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மஹா., சட்டசபை தேர்தல் சித்தாந்தங்களுக்கும், சில கோடீஸ்வரர்களுக்கும் இடையே நடக்கும் போர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் பயிரிடும் வேளாண் பொருட்களுக்கு நியாமான விலை கிடைப்பது உறுதி செய்யப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எல்லாவற்றிற்கும் முன் முக்கிய பிரச்னை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதை, நிறைவேற்றும். மும்பையின் நிலம் அங்கு வாழும் மக்களுக்கு சொந்தமானது. அதனை அபகரித்து ஒருவருக்கு உதவுவதற்காக பறிக்கப்படுகிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
நவ 18, 2024 20:07

நான் நினைக்கிறேன் இந்தப்போர் உக்ரைன்-ரஷ்யா போரைவிட, இஸ்ரேல்-ஹமாஸ் போரைவிட மிக மிக விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன். பொதுவாக போரில் காமெடியன், காமெடி இருக்காது. ஆனால் இந்தப்போரில் எல்லாம் உண்டு. ஆகையால்தான் நான் முன்பே கூறினேன் இந்தப்போர் விறுவிறுப்பாக இருக்கும் என்று.


என்றும் இந்தியன்
நவ 18, 2024 17:17

சில கோடீஸ்வரர்களுக்கும் இடையே நடக்கும் போர்??அதாவது தனக்கும் மற்ற கோடீஸ்வரர்களுக்கும் இடையே நடக்கும் போர் என்று எவ்வளவு நேரடியாக ஒப்புக்கொண்டிருக்கின்றார் பாருங்கள்


வாய்மையே வெல்லும்
நவ 18, 2024 14:25

அதானி அம்பானி இத்தாலியில் பிறந்தவருக்கு பத்திகிடுச்சி . இதே வெறுப்பு பேச்சில் டெய்லி நூறு சட்டை கிழியுதாம் . அம்புட்டு வெறிவவுத்தெரிச்சல்.........


Jay
நவ 18, 2024 14:18

ஏற்கனவே பலமுறை கூறி பல தேர்தல்களில் தோற்றுப் போனபின்பும் மறுபடி மறுபடியும் அதே பேச்சை எடுத்து வெற்றி பெற முடியுமா?


sankar
நவ 18, 2024 13:56

பாவம் வேறு எதுவுமே சொலவதற்கில்லை


சமீபத்திய செய்தி