உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு; 24 மணிநேரத்தில் வாபஸ் பெற்றார் ராகுல்

பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு; 24 மணிநேரத்தில் வாபஸ் பெற்றார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை காங்கிரஸ் எம்பி ராகுல் வாபஸ் பெற்றார். கடந்த 2023ல் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் பேசுகையில், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். ராகுலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d5kl7gpa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சாவர்க்கரின் உறவினர் சத்யாகி என்பவர் வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.இதனிடையே, ராகுலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் மிலிந்த் பவார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை செப்.,10க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராகுலுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவரது வக்கீல் மிலிந்த் பவார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில், மனு வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து வக்கீல் மிலிந்த் பவார் கூறுகையில், 'ராகுலின் ஒப்புதல் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, வாபஸ் பெறப்பட்டுள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

S. Neelakanta Pillai
ஆக 15, 2025 14:36

ஒப்புதல் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்தார்களாம். அப்படி என்றால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக வழக்கு தாக்கல் செய்தவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


Ethiraj
ஆக 15, 2025 07:25

Coward ,liar, words apply to few political leaders


rama adhavan
ஆக 14, 2025 22:38

மனுதாரரின் கையொப்பம் இன்றி நீதிமன்றத்தில் வக்கீல் எப்படி வக்காலத்து நாமாவில் கையொப்பம் இட்டு மனு தாக்கல் செய்ய முடியும். கோர்ட் ரெஜிஸ்டரி எப்படி அனுமதி தந்தார்? கோல்மாலாக உள்ளதே?


Barakat Ali
ஆக 14, 2025 21:30

அவரது ஒப்புதல் இல்லாமல் ஏன் மனுவளிக்கப்பட்டது என்று கூட நீதிமன்றம் கேட்கவில்லையா ????


Tamilan
ஆக 14, 2025 21:26

பாதுகாப்பு என்ற பெயரில் இந்துமதவாத தீவிரவாதிகளையோ அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையோ அனுப்பினாலும் அனுப்புவார்கள் என்ற பயம்


Ganapathy
ஆக 14, 2025 20:59

என்ன ...அல்லு புடிச்குச்சா...


இராம தாசன்
ஆக 14, 2025 20:47

பாதுகாப்பு கொடுத்தால் அப்புறம் ராகுல் பண்ணும் துரோக செயல்கள் எல்லாம் வெளியில் வந்து விடுமே? அதனால் தான் உடனே திரும்ப பெற பட்டது


MARUTHU PANDIAR
ஆக 14, 2025 19:44

வாய்ப்பிருப்பதாக தெரிய வில்லை


vbs manian
ஆக 14, 2025 18:53

எப்போது அரசியல் முதிர்ச்சி வரும்.


Indhuindian
ஆக 14, 2025 18:02

சம்மதம் இல்லாம கோர்ட்ல அபிடவிட் போட்ட வைக்கோலுக்கு ஒரு தண்டனையும் கிடையாதா எஜமான் கொறஞ்ச பட்சம் பார் கவுன்சில்ல சொல்லி அவரோட கோட்டையாவது கட்டியிருக்கலாம்


புதிய வீடியோ