உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் கருத்தில் இருந்து மாறுபடும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்

ராகுல் கருத்தில் இருந்து மாறுபடும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.,க்களான சசி தரூர் மற்றும் ராஜிவ் சுக்லா ஆகியோர் இந்திய பொருளாதாரத்தின் பலத்தை எடுத்துக் காட்டி உள்ளனர்.அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்து இருந்தார். மேலும் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது இறந்த பொருளாதாரத்தை மேலும் கீழே கொண்டு செல்லட்டும்.இந்தியாவுடன் அமெரிக்கா மிக குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், டிரம்ப் சரியாகத் தான் சொல்லி உள்ளார். அவர் உண்மையை சொல்லி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் இருக்கும் என்றார்.ஆனால், காங்கிரஸ் எம்.பி.,க்கள் சசி தரூர் மற்றும் ராஜிவ் சுக்லா ஆகியோர் இதற்கு மாறான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.சசி தரூர் கூறுகையில், இது மிகவும் சவால்மிக்க பேச்சுவார்த்தை. நாம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரிட்டனுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.அமெரிக்கா மட்டுமே நமது ஒரே வர்த்தக பங்குதாரர் அல்ல. அமெரிக்கா முற்றிலும் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால், நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். இந்தியாவின் வலிமை என்னவென்றால், நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை. நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது எனத் தெரிவித்து இருந்தார்.மற்றொரு ராஜ்யசபா எம்.பி.,யான காங்கிரசை சேர்ந்த ராஜிவ் சுக்லா கூறும்போது, இந்தியா மற்றும் ரஷ்யா பொருளாதாரம் இறந்துவிட்டது என டிரம்ப் சொல்வது தவறு. இந்திய பொருளாதாரம் இறக்கவில்லை. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை செய்தனர். இந்த சீர்திருத்தங்களை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னெடுத்து சென்றார்.மன்மோகன் சிங் இதனை வலிமைப்படுத்தினார். தற்போதைய அரசும் அந்த பணியை செய்து வருகிறது. நமது பொருளதாரம் பலவீனமாக இல்லை. நம்மை பொருளாதார ரீதியாக முடித்துவிடலாம் என யாரேனும் கருதினால், அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது அர்த்தம். டிரம்ப் குழப்ப நிலையில் வாழ்கிறார். வரி விதிப்பது என்பது தவறு. தனக்கு விருப்பமான நாட்டுடன் வர்த்தகம் செய்ய அனைத்து நாடுகளுக்கும் உரிமை உண்டு. அதற்கு கட்டுப்பாடு விதிப்பது, பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக பேசுவது, ரஷ்யா உடன் வர்த்தகம் மற்றும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது சரியான நடவடிக்கை அல்ல எனக்கூறியுள்ளார்.ராகுலின் கருத்துக்கு நேர்மாறான கருத்துக்களையே காங்கிரஸ் எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.மேலும் இண்டியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட அறிக்கையில், ' இந்தியப் பொருளாதாரம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் இருப்பதை அறிய போதுமான சட்டப்பூர்வமான தரவுகள் உள்ளன என்பதை ஒருவர் சொல்லத் தேவையில்லை. இதை ஒரு இறந்த பொருளாதாரம் என அழைப்பது ஆணவம் அல்லது அறியாமையால் மட்டுமே முடியும்.இந்தியாவுக்கு பொருளாதார சவால்கள் உள்ளன. தனி நபர் வருமானத்தை அதிகரிக்க பணியாற்ற வேண்டும். சொத்து சமநிலையை சரி செய்ய பணியாற்ற வேண்டும். விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பிரசனையை சரி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பின்மை பிரச்னையை சரி செய்ய வேண்டும். ஆனால், பொருளாதார சவால்களை, இறந்த பொருளாதாரத்துக்கு சமமாக இருக்காது. ஒரு ஒப்பந்தத்தை முடிக்க துருப்பு போல் வடிவமைக்கப்பட்ட அறிக்கை என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ராகுலின் கருத்துக்கு பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.அக்கட்சி எம்.பி., அமித் மாளவியா கூறியதாவது; டிரம்ப்பின் அறிக்கையை எதிரொலிப்பதன் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தனது தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார். இது இந்திய மக்களின் அபிலாஷைகள் , சாதனைகள் நல்வாழ்வுக்கு அவமானம்.உண்மையை சொல்ல வேண்டுமானால் இங்கு இறந்து கொண்டிருப்பது ராகுலின் அரசியல் நம்பகத்தன்மை மற்றும் பாரம்பரியம். சர்வதேசபொருளாதார மந்தநிலையின் போதும், இந்திய வேகமாகவளரும் பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை உலக வங்கியும் ஐஎம்எப் அமைப்பும் உயர்த்தி உள்ளன.யாருக்காக ராகுல் பேசி வருகிறார். இந்தியாவை தரம் தாழ்த்தும் வெளிநாட்டு பிரசாரத்தை அவர் மேற்கொள்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியதாவது: இன்று இரண்டு காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கையை நான் பார்த்தேன். ஒருவர் நாட்டின் நலனுக்காக பேசுகிறார். மற்றொருவர், தனது கடல்கடந்த வெளிநாட்டு முதலாளிகளை மகிழ்விக்கும் வகையில் பேசுகிறார்.இருண்ட வானத்தில் இந்தியா மட்டுமே ஒளிமயமான இடம் என உலகம் ஒப்புக் கொள்ளும் நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் வேறு விதமாக பேசுகிறார்.ராகுல் தொடர்ந்து தனது அறியாமையை பதக்கமாக அணிந்து கொள்கிறார். இந்தியாவின் எழுச்சியை கண்டு கொள்ளாததுடன், வெளிநாட்டு குரல்களை எதிரொலிக்கும் வகையில் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kasimani Baskaran
ஆக 01, 2025 04:12

உள்ளுக்குள் இருக்கும் எதிரிகள் கையாளப்பட வேண்டும் என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ளவில்லை.இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கூட்டத்தை பாராளுமன்றத்துக்குள் விடுவதே தவறு. விட்டாலும் கூட அவர்கள் வெளிநடப்பு அல்லது கூச்சல் போட மட்டுமே செய்கிறார்கள். பதவி நீக்கம் செய்ய வேண்டியதுதானே..


இராம தாசன்
ஆக 01, 2025 02:26

நேற்று அவரை ஒரு பொய்யர் என்று சொல்ல சொன்னார் - சொன்ன பின் இன்று அவர் சொல்வது உண்மை என்கிறார் - பொய்யர் சொல்வது உண்மை என்றால் பப்புவை என்ன என்று சொல்வது


Balakumar V
ஆக 01, 2025 00:25

கருத்து சொல்லும் அளவுக்கு ராகுல் தகுதியானவர் என நினைப்பதே தவறு.


spr
ஜூலை 31, 2025 23:32

"பூனைக்கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகுமாம் " - திருவாளர் ராகுல் உலக நடத்தை புரியாமல் பேசுகிறார். இந்திய ஊடகங்கள் செய்தித்தாள்கள் சொல்வதைக் கூடக் கேட்க வேண்டாம் படிக்க வேண்டாம் அதற்கெல்லாம் அறிவு வேண்டும் ஆனால் நமக்குத்தான் வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் வேத வாக்கன்றோ, இந்தியா முன்னேறுகிறதென பன்னாட்டு ஊடகங்கள் பன்னாட்டுச் செய்தித்தாள்கள் சொல்வதைக் கூடப் படிப்பதில்லை போலும். இந்தியாவின் பொருளாதாரம் அந்தத் துறை வல்லுநர்களுக்கு கூடப் புரியாத ஒரு புதிர் இது பன்னாட்டுச் சந்தையை முழுமையாக நம்பியிருக்கவில்லை ஆனால் அன்னியச் செலாவணிக் கையிருப்பை வைத்துதான் உலக நாடுகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்தை எடை போடுவதால் நாமும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்க ஏற்றுமதியை நம்புகிறோம் திரு தரூர் போன்றவர்களுக்கு இருக்கும் அறிவு ராகுலுக்கு இருக்குமென்று எதிர்பார்ப்பது தவறு


Anil Kumar
ஜூலை 31, 2025 23:17

தன்னிடம் இருக்கும் பல்லாயிரக்கானக்கான கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல், சோனியா மற்றும் பிரியங்கா நாட்டிற்கு கொடுத்து இறந்த பொருளாதாரத்தை உயிர்பிக்கலாமே. வாய்க்கு வந்ததை உளறாமல் ராகுல் தன் தந்தையை போல நல்ல தலைவர் ஆவதற்கு முயற்சிக்க வேண்டும்.


hariharan
ஜூலை 31, 2025 22:51

தன் தாயை பழிப்பதும் தாய்நாட்டை பழிப்பதும் இரண்டும் ஒன்றே.


Venkatesan Srinivasan
ஆக 01, 2025 00:28

அவன் இறப்பை பற்றி பேச தொடங்கி விட்டான். அவன் மனதை அது ஆக்ரமித்து விட்டது.


Ganapathy
ஜூலை 31, 2025 22:35

என்ன மகிழ்ச்சி...என்ன மகிழ்ச்சி...நம்ம வரில ஊர் சுற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் ரவுடித்தனம் செஞ்சுகிட்டு...நம்ம பொருளாதாரம் நாசமா போகணும்னு ட்ரம்ப் சொன்னதைக்கேட்டு ஒரு பாராளுமன்ற எம்பியாக எதிர்க்கட்சி தலைவராக எப்படிப்பட்ட பொறுப்பில்லாத மூர்க்க மூடனாக இருந்து தனது மட்டற்ற மகிழ்ச்சியை கிண்டலாக சிரிச்சு கும்மாளத்தோட தெரிவிக்கிறார்.


m g gnanasekaran
ஜூலை 31, 2025 22:22

oru british passport holder agiya Ragul gandhi indiyavirku ethiragathan pesuvaar


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 21:43

இறந்த பொருளாதாரத்தில் சோனியா ராபர்ட் வதேரா, சபரீஷ் குடும்ப சொத்துக்கள் பன்மடங்கு அதிகரித்ததெப்படி?


எஸ் எஸ்
ஜூலை 31, 2025 21:42

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ராகுலுக்கு பொருளாதாரம் பற்றி சரியான புரிதல் இல்லையென்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை