உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பார்லியில் பேசிய பொய்கள்; சுக்கு நூறாக நொறுக்கிய விமானப்படை தளபதி!

ராகுல் பார்லியில் பேசிய பொய்கள்; சுக்கு நூறாக நொறுக்கிய விமானப்படை தளபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது விமானிகளின் கைகள் கட்டப்பட்டன. படைகளுக்கு சுதந்திரம் இல்லை. அரசியல் உறுதி இல்லை என லோக்சபாவில் பேசிய ராகுல் குறிப்பிட்டார். ஆனால், இதனை மறுத்த விமானப்படை தளபதி ஏபி சிங், 'ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு அரசியல் மன உறுதியும், படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதும் தான் காரணம் என்று தெரிவித்தார்.

விவாதம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.,22 ல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 ஹிந்து சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி அதிகாலை இந்திய படையினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vf0ix0bk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்திய படைகள் முறியடித்தன. இரு தரப்புக்குமான மோதல் கடந்த மே 10ம் தேதி முடிவுக்கு வந்து.ஆனால், இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து மத்திய அரசு விவாதத்துக்கு ஒப்புக் கொண்டது.

அரசியல் உறுதி

கடந்த ஜூலை 30ம் தேதி லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்தோம். எதிர்க்கட்சிகள் அதற்காக பெருமைப்படுகிறோம். ஆனால், ராணுவ தாக்குதல் என முடிவெடுத்துவிட்டால், 100 சதவீத அரசியல் உறுதியும், சுதந்திரமான நடவடிக்கையும் தேவை. கடந்த 1971ல், அரசியல் உறுதி இருந்தது. பிரதமர் இந்திரா, 'ஆறு மாதமோ, ஒரு வருடமோ எடுத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று ராணுவ தளபதியிடம் உறுதி அளித்தார். விளைவு, 1 லட்சம் பாக்., வீரர்கள் சரணடைந்தனர். வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது.

முழுமையான சுதந்திரம்

நீங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றீர்கள். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினீர்கள். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை தாக்க வேண்டாம் என போர் விமானிகளிடம் சொன்னீர்கள். அதாவது, நீங்கள் விமானியிடம், பாகிஸ்தான் சென்று தாக்குங்கள். வான் பாதுகாப்பை எதிர்கொள்ளுங்கள் என சொன்னீர்கள். இதற்கு அர்த்தம் அவர்களின் கைகளை முதுகுக்கு பின்னால் கட்டிப்போட்டு விட்டீர்கள் என்பதாகும். நமது படைகள் திறமையாக செயல்பட, அவர்களுக்கு அரசியல் உறுதியும், சுதந்திரமும் தேவைப்படுகிறது. இந்திய ஆயுதப்படைகளை களமிறக்க விரும்புபவர்கள், அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் வலிமையான அரசியல் உறுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மறைக்க முயல்கிறார்

ஆப்பரேஷன் சிந்தூர் நடந்தபோது, உலகில் ஒரு நாடு கூட பாகிஸ்தான் என்ற வார்த்தையை சொல்ல வில்லை. அதாவது, அவர்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் ஒரே மாதிரி பார்த்தார்கள். பாகிஸ்தான் தான் பயங்கரவாத நாடு, இந்தியா பாதிக்கப்பட்ட நாடு என்பதை புரிந்து உலகம் கொள்ளவில்லை. மேலும், நமது தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்து நின்றபோது, அதன் தளபதியை அழைத்து, உங்கள் ராணுவ தளங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்று இந்தியா உறுதிமொழி கொடுக்க என்ன அவசியம்? ராணுவத்தின் கைகளை அவர் கட்டிப் போட்டதால் தான் நாம் ரபேல் விமானங்களை இழக்க நேரிட்டது. அதைக் கூட மறைக்க முயல்கிறார் மோடி. இவ்வாறு ராகுல் பேசினார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு லோக்சபாவில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் கொடுத்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தக்க பதிலடி கொடுத்தார். இதன் பிறகும், எதிர்க்கட்சிகள் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தன. தங்களது குற்றச்சாட்டுகளை மீண்டும் தெரிவித்து வந்தன.

முக்கிய பங்கு

இந்நிலையில்,நேற்று ( ஆக.,09) பெங்களூரில் நடந்த விமான தளபதி எல்.எம்.கத்ரே நினைவு சொற்பொழிவில் நமது விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் கூறியதாவது: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டது. தாக்குதலுக்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க, நம் வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக வேலை செய்தது. ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் வாங்கிய, 'எஸ்- 400' கவச அமைப்பு, பெருமளவு உதவியது. அந்நாட்டு ராணுவம் வீசிய குண்டுகள், ஏவுகணைகளை இந்த அமைப்பு முறியடித்து, வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

மிகப்பெரிய சேதம்

'எஸ் - 400' கவச அமைப்பை மீறி பாக்., ராணுவத்தால் எதையும் செய்ய முடியவில்லை.இது ஒரு உயர் தொழில்நுட்பப் போர். 90 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டின் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எதிரிகளின் விமானங்கள், ஆயுதங்களை கண்காணித்து தாக்குதலை முறியடிக்கும் 'ஏ.இ.டபிள்யூ.சி' எனப்படும் மிகப்பெரிய போர் விமானமும், இந்த தாக்குதலின் போது அழிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஜகோபாபாத் நகரில் இருந்த விமான தளத்தில் நடத்திய தாக்குதலில் எப் - 16 விமானங்கள் சுக்குநுாறாகின. இந்த விமானங்களை, அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியிருந்தது.

காரணம்

ஆப்பரேஷன் வெற்றிக்கு காரணம் என்னவென்றால், அரசியல் உறுதி இருந்தது. தெளிவான அரசியல் உறுதி இருந்தது. தெளிவான உத்தரவுகள் வழங்கப்பட்டன. எங்கள் மீது எந்த கட்டுப்பாடு இல்லை. பலர் ஏதேதோ பேசுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. பலரும் பேசினர். ஏதாவது கட்டுப்பாடுகள் இருந்ததா? தடை ஏதும் இருந்ததா? ஏன கேட்கின்றனர். ஏதாவது கட்டுப்பாடுகள் இருந்தது என்றால், அது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்டது.படைகள் ஆகிய நாங்களே போருக்கான விதிகளை வகுத்து கொண்டோம். பதற்றத்தை எப்படி தணிப்பது என நாங்களே முடிவு செய்தோம். எங்கள் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், சமாளிக்க முடியாது என தெரிந்த பின், போரை நிறுத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் வந்தது. சண்டை வேண்டாம் என்ற செய்தியை நமக்கு அனுப்பியது. இதை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இந்த விஷயத்தில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

GSR
செப் 05, 2025 21:02

ராணுவம் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சொல்லும் நிலையில் பாரத ராணுவம் இல்லை. திராவிட புத்திசாலிதனம் வெளிப்பட்டு இருக்கிறது.


M Ramachandran
ஆக 10, 2025 21:37

முன்பு போல் தேர்தல் கம்மிஷின் என்ன சொன்னாலும் வாய் மூடி மௌனமாக இருக்கும் என்று தப்பு கணக்கு செய்து சும்மா ரீல் சுத்தி பார்த்தது. பாவம் பப்பு எசகு பிசகாக மாட்டிக்கிச்சு.


K.n. Dhasarathan
ஆக 10, 2025 21:23

விமானப்படை தளபதிக்கு நம் நாட்டின் எத்தனை விமானங்கள் சுடப்பட்டின ? தெரியுமா ? தெரியாதா? ஏன் அதை சொல்லவில்லை? நாம் விமானங்களை இழக்கவில்லை என்றால் அதையாவது சொல்லணுமே ஏன் சொல்லவில்லை ? இவர் உண்மையான இந்தியனா ? யாரும் கேள்வி கேட்கவிடாமல் எல்லா பதிலும் இருக்குமாறு தான் பதில் சொல்ல வேண்டும், அதிகாரி மாதிரி பேசவில்லை, கட்சிக்காரர் மாதிரி பேசுகிறார்.


vivek
ஆக 11, 2025 08:12

உனக்கு எதுக்கு சொல்லணும்


Ramesh Sargam
ஆக 10, 2025 19:45

ராகுலுக்கு பொய் மட்டும்தான் பேசத்தெரியும். அதேபோல தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும்.


அப்பாவி
ஆக 10, 2025 19:42

இதை சொல்றதுக்கு இத்தனை நாள் எதுக்கு? வாய்ப்பூட்டா?


vivek
ஆக 10, 2025 21:04

நீயும் ரொம்ப நாளா அந்த பாஞ்ச பாஞ்ச உளறல் வரலையே அப்பாவி


பிழைக்கத்தெறியாதவன்
ஆக 10, 2025 19:38

இலங்கையில் IPKF ஆப்பரேஷன் போதுதான், அரசியல் உறுதி இல்லாத்தால் நமது படைகளின் கை கட்டப்பட்டது. 2500க்கும் அதிகமான வீரர்கள் தேவையின்றி உயிர் இழந்தனர். அந்த தவறே இராஜிவ் காந்தியின் மரணத்திற்கு வித்திட்டது.


மனிதன்
ஆக 10, 2025 19:12

தேர்தல் கமிஷனும் ஆளும் வர்க்கமும் சேர்ந்து , மக்களின் ஒரே ஒரு ஆயுதமான "ஒட்டு" அதையும் திருடிக்கொள்கிறார்களே, அதை ராகுல் ஆதாரத்துடன் நிரூபித்தரே, இந்தியா டுடே அந்த வீட்டிற்க்கே சென்று உறுதி செய்ததே...த ஹிந்து, இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் அதைப்பற்றி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியத்தே... நீங்கள் அதை ஒரு பெட்டிச்செய்தியாகப்போட்டு கடந்து செல்வதன் நோக்கம் என்ன? தேர்தல் கமிஷனைப்பற்றி சொன்னால் பாஜக வினர் கதறுகிறார்களே...தேர்தல் கமிஷனிடம் உண்மை இருந்தால் "டிஜிட்டல்" ஆதாரத்தை கொடுக்கவேண்டியதுதனே? ஏன் கிலோக்கணக்கில் பேப்பரை கொடுக்கவேண்டும்? ஏன் ஓட்டுச்சாவடியின் CCTV ஆதாரங்களை அழிக்கவேண்டும்? இந்த குற்றச்சாட்டுக்கு நியாயமாக தேர்தல் கமிஷனும் ஆளுகட்சியும் என்ன செய்ய வேண்டும்? சரி இதை நாங்கள் விசாரிக்கிறோம் என்றல்லவா சொல்லவேண்டும்? அதை விடுத்து ராகுலை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்... அவர் பப்பு அல்ல,உங்களுக்கான ஆப்பு....


k.Ravi Chandran, Pudukkottai
ஆக 10, 2025 18:32

இந்திய விமானப் படைத் தளபதி சொல்வதை எல்லாம் நான் நம்ப மாட்டேன். டிரம்பரம், முனீரும் சொன்னால்தான் நான் நம்புவேன்.


Jss
ஆக 10, 2025 16:53

பாகிஸ்த்தான் F16 வுமானங்களை வீங்கவுல்லை. ஆப்கன் போருன்போது/ இரட்டை போபுரம் தகர்க்கப்பட்ட போதோ ஓசியாக பெற்று கொண்டது.


Balasubramanian
ஆக 10, 2025 16:22

நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு என்ன ஆதாரம்? என்ற அடுத்த கேள்விகளுக்கு தயாராகுங்கள் ராகுல் ஜி


சமீபத்திய செய்தி