உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுகிறது!

இண்டியா கூட்டணி தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' இண்டியா' கூட்டணிக்கு தலைமை தாங்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தள லாலு பிரசாத்தும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், 'இண்டியா' கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இடம்பெற்றன. தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே லோக்சபா தேர்தலை இண்டியா கூட்டணி சந்தித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ex7a7s0a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பேச்சு

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி அமர்ந்தது. அடுத்து நடந்த ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களிலும் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதால், அக்கட்சியின் எம்.பி., ராகுலின் தலைமையில் இண்டியா கூட்டணி செயல்படுவதாக கூறப்படும் நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.

கருத்து வேறுபாடு

மேலும், அதானி விவகாரத்தில் பார்லிமென்ட்டை ராகுல் தலைமையில் காங்கிரஸ் முடக்கி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் இயங்க வேண்டும் என திரிணமுல் கூறுகிறது. இது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை எதிரொலித்தது.

ஆதரவு

இச்சூழலில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ' வாய்ப்பு கிடைத்தால் கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் ', எனக்கூறியிருந்தார். மம்தாவின் கருத்து ' இண்டியா' கூட்டணியில் சலசலசப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் கருத்துக்கு சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., கட்சி - சரத்சந்திர பவார் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருந்தன.

ஆதரிப்போம்

இந்நிலையில் மம்தாவுக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. மம்தாவை நாங்கள் ஆதரிப்போம். 'இண்டியா' கூட்டணியின் தலைமை மம்தாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

திறமையானவர்

ஆந்திராவை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி எம்.பி., விஜயசாய் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ' இண்டியா ' கூட்டணியை வழிநடத்த மம்தா திறமையான தலைவர். கூட்டணியை வழிநடத்த தேவையான அரசியல் தேர்தல் அனுபவம் உள்ளது. 42 லோக்சபா தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலத்தின் முதல்வராக உள்ள அவர், நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது திறமையை நிரூபித்து வருகிறார்', இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Jay
டிச 11, 2024 00:04

திதிக்கு குடும்ப வாரிசு இல்லை என்பது ஆறுகால விசியம். விடியலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம், 40/40 போன்ற சாதனை வேறு யாரும் செய்யவில்லை. ஆனால் சனதான பேச்சு போன்ற மூலம் நிர்மூலம் ஆக்கிவிடலாம்


RAJ
டிச 10, 2024 21:35

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. இனிமே பயம் இல்ல. .. பங்களாதேஷ் யூனுஸ் ஹாப்பி அண்ணாச்சி..


S. Venugopal
டிச 10, 2024 20:49

தோசை கல்லிலிருந்து தப்பிக்க அடுப்பில் விழுந்த கதைதான்


தாமரை மலர்கிறது
டிச 10, 2024 20:30

ராகுலுக்கு மம்தா பேனர்ஜி நூறு மடங்கு பெட்டர். இந்தியா கூட்டணி தலைவராக மம்தா பொறுப்பேற்றால், ஒரு எதிர்க்கட்சியாக இண்டி கூட்டணி செயல்பட வாய்ப்புள்ளது.


RAMAKRISHNAN NATESAN
டிச 10, 2024 20:19

பிரதமராக யாரை கைகாட்டணும் ? பிரியங்கா அம்மாவையா ? ராகுல் காந்தியையா ? மம்தாவையா ? இரும்புக்கரம் கொண்ட சர்வாதிகாரி குழப்பம் ......


krishna
டிச 11, 2024 14:43

NEENGA VERA IRUMBU KARAM SENGAL THIRUDAN AVARGALAI KAI KAATUVAAR.


Ramesh Sargam
டிச 10, 2024 19:28

மம்தாவுக்கு ஆதரவு. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு. சோனியா அண்ட் பேமிலி back to Italy


Mohammad ali
டிச 10, 2024 19:18

மம்தா


MANI
டிச 10, 2024 19:18

நிச்சயமா திறமையான ஆளுதான்.ஒரு தேர்தலுக்கு காலை உடைச்சுகிட்டு சக்கர நாற்காலியில வருவாரு. அடுத்த தேர்தலுக்கு நெற்றியில ரத்தம் வருகிற மாதிரி போஸ் குடுப்பாரு. இப்படி எதையாவது செஞ்சு கூட்டணியை ஜெயிக்க வச்சுடுவாரு.


sridhar
டிச 10, 2024 19:09

பாவம் ராகுல் , பச்ச புள்ள . அதை விடுவித்து விடுங்க . அது பம்பரம் விளையாடி பொழுது ஓட்டிடும் .


SUBBU,
டிச 10, 2024 18:48

2,277 Companies Left Mamata Banerjee Ruled West Bengal between 2019 to 2024.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை