உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்டோசர் கொள்கை அம்பலம்: எதை சொல்கிறார் ராகுல்!

புல்டோசர் கொள்கை அம்பலம்: எதை சொல்கிறார் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பா.ஜ.,வின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான முகம் தற்போது அம்பலமாகியுள்ளது' என காங்கிரஸ் எம்.பி.,யும். எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.'குற்ற வழக்குகளில் ஒருவர் சிக்கினாலே அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது சரியா? சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை இருக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கருத்துக்கு ராகுல் வரவேற்பு தெரிவித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அம்பலம்

பா.ஜ.,வின் அரசியலைப்பு சட்டத்திற்கு விரோதமான, நியாயமற்ற 'புல்டோசர் கொள்கை' குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. மனிதநேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கும் பா.ஜ.,வின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது. கட்டுக்கடங்காத அதிகாரத்தின் அடையாளமாக விளங்கிய புல்டோசர், சிவில் உரிமைகளை காலில் போட்டு மிதித்து சட்டத்தை ஆணவத்துடன் தொடர்ந்து சவால் செய்து வருகிறது.

வழிகாட்டுதல்

'விரைவான நீதி' என்ற போர்வையில், ஏழைகளின் வீடுகள் புல்டோசர்களை பயன்படுத்தி இடிக்கப்படுகிறது. மிகவும் உணர்ச்சிகரமான இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும். பா.ஜ., அரசின் இந்த ஜனநாயக விரோதப் பிரசாரத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Tetra
செப் 08, 2024 20:44

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல. இதை அதன் பிறந்த வீட்டுக்கே அனுப்ப வேண்டும்


Mohan
செப் 03, 2024 19:08

அய்யா ராகுல் ஜி அவர்களே, இதோ இங்கே தங்க தமிழ் நாட்டிலே சென்ற ஆறு மாதங்களில் பத்து கோவில்களை விடியல் அரசு புல்டோசர் கொண்டு இடித்து தள்ளி இருக்கிறது. புரமபோக்கு நிலத்தில் குடிசை போடட ஏழை மக்களின் குடிசைகளை இடித்து இந்த புல்டோசர் தான் இ டித்திருக்கிறது. உங்களது தமிழக காங்கிரஸைன் பட்டியலினத்தலைவர் ஒன்றுமே பேசவில்லை. ஓகோ கூட்டணி மாநிலத்தில் நடக்கும் எந்த சமாச்சாரத்திற்கும் ராகுல்ஜி எதுவும் சொல்லமாட்டார் இல்லையா ?


ஆரூர் ரங்
செப் 03, 2024 15:55

அப்போ சென்ற வாரம் உங்க காங்கிரஸ் தெலங்கானா முதல்வர் ரேவந்த்( அனுமதி பெற்று கட்டப்பட்ட ) நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபத்தை இடித்தது மட்டும் நியாயமா?


Anbuselvan
செப் 03, 2024 14:53

புல்டோசர் யுக்தி பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்த படுகிறது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பயன்படுத்தப் படவில்லை என ஒரு அஃபிடவிட் இவரால் தாக்கல் செய்ய முடியுமா


GANESH SHANKAR
செப் 03, 2024 14:29

நீதிபதிகள் சிலர் இன்னும் காங்கிரஸ் ஆதரவலர்களாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அரசாங்க சொத்துகளில் தகுந்த உத்தரவு இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசிற்கு உரிமை இல்லையா? அதற்கும் கோர்ட் உத்திரவு வேண்டுமா?


Nandakumar Naidu.
செப் 03, 2024 12:36

இவன் ஒரு பாகிஸ்தானின்,அமெரிக்காவின் மற்றும் சீனாவின் ஏஜென்ட். (ஹிந்தியில் தலால் என்று சொல்லுவார்கள்). இவன் ஒரு தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதி. வரும் தேர்தல்களில் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி.


Ganapathy
செப் 03, 2024 11:18

இவன் எப்படி இன்னமும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவராக இருக்க முடியுது? உச்சநீதிமன்ற நீதிபதிகளே இவனமாதிரியான எந்த மொள்ளமாறியும் கேப்மாறியும் இந்த தேசத்துக்கு எதிராக பேசினாலும் பல குடியுரிமைகள் வச்சிருந்தாலும் நமது பாராளுமன்ற எதிர்கட்சி தலைவராக இருக்கலாமா?


ஆரூர் ரங்
செப் 03, 2024 10:37

உங்க சித்தப்பா சஞ்சய் காந்தி டெல்லி துர்க்மான்கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினார். ( அப்போ கோர்ட் தலையிடவில்லை). அவர்களுக்கு கட்டாய கருத்தடை திட்டத்தையும் அமல்படுத்தி உங்களுக்கு நல்ல வழி காட்டினாரே.


Sundar
செப் 03, 2024 10:20

அந்த நீதிபதிகள் குற்றவாளிகளின் குற்ற செயல்களை மட்டுமே கவனித்து தகுந்த தீர்ப்பை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எவனும் தண்டனை பெற முடியாது.


Kumar Kumzi
செப் 03, 2024 09:54

இத்தாலிய ரெத்தம் ஓடும் இவனது உடம்பில் எப்படி இந்திய பாசம் இருக்கும் இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவன் வெளிநாடுகளின் கைக்கூலி


சமீபத்திய செய்தி