உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 ஆண்டுகளுக்கு பின்னர் அமேதியில் ராகுல்; கிரஹபிரவேசம் நடத்துகிறார் இரானி

15 ஆண்டுகளுக்கு பின்னர் அமேதியில் ராகுல்; கிரஹபிரவேசம் நடத்துகிறார் இரானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 15 ஆண்டுகளுக்கு பின்னர் அமேதி தொகுதியில் ராகுல் யாத்திரை மேற்கொள்கிறார். ஸ்மிருதி இரானியும் தன்னுடைய புதுவீட்டிற்கு கிரஹபிரவேசம் நடத்துகிறார்.

காங்கிரஸ் எம்.பி.,ராகுல் மேற்கொண்டு வரும் பாரத்ஜோடோ நியாய யாத்திரை உ.பி., மாநிலத்திற்குள் நாளை ( 19 ம் தேதி) திங்கட்கிழமை நுழைய உள்ளது. அதே தினத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் அமேதி தொகுதியில் நான்குநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.கடந்த 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் அமேதி தொகுதி எம்.பியாக இருந்தவர் ராகுல். 2019-ம் ஆண்டில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தற்போது ஒரே நேரத்தில் அமேதி தொகுதியில் இருப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2022-ம் ஆண்டில் நடைபெற்ற உ.பி., மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமேதிக்கு வந்துள்ளனர்.

புது வீட்டுக்கு கிரஹபிரவேசம்

அமேதி தொகுதியில் வெற்றிபெற்றால் வீடு கட்டி குடியேறுவேன் என ஸ்மிருதி இரானி வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது கட்டப்பட்டு உள்ள வீ்ட்டிற்கு வரும் 22ம் தேதி கிரஹபிரவேசம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் பொதுகூட்டம்

பாரத்ஜோடோ நியாய யாத்திரை திங்கட்கிழமை அமேதி நகரரை சென்றடைகிறது. அந்நகரில் பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெறும் என காங்.,கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

அதிகாரிகள் விளக்கம்

இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் ஒரே நகரில் இருந்த போதிலும் அவர்கள் நேருக்கு நேர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KUMAR. S
பிப் 19, 2024 10:42

2022-ம் ஆண்டில் நடைபெற்ற உ.பி., மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமேதிக்கு வந்துள்ளனர்.. அது என்ன தலைப்பு.. 15 வருடங்களுக்கு பின்னர் அமேதியில் ராகுல். அவர் தொகுதிக்கே போகாத மாதிரி ஒரு தலைப்பு.


duruvasar
பிப் 19, 2024 08:32

தற்சமயம் ராகுலின் பெயரைக் கூட உச்சரிக்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தயங்குவது ஏன்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2024 11:01

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ... Are you sure ??


R S BALA
பிப் 19, 2024 06:09

இந்த பங்களா வீடு சூப்பரா இருக்கே..


Ramesh Sargam
பிப் 19, 2024 00:24

இருவரும் நேருக்கு நேர் சந்தித்திக்கொண்டால், நிலைமை எப்படி இருக்கும்?


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2024 07:16

மோதலில்தான் ........


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ