உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்

புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், டில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட சுனேரி பாக் பங்களாவில் குடியேற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா எம்.பி.,யாக தேர்தெடுக்கப்பட்ட பின், 2005- முதல் டில்லியின், 12 துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராகுல் வசித்து வந்தார்.

அவதுாறு வழக்கு

இதனிடையே, அவதுாறு வழக்கில் ராகுல், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. இதனால் 2023ல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு குடியிருப்பை காலி செய்தார். அதன் பின் தாயார் சோனியாவின் 10, ஜன்பத் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகும் அங்கேயே வசித்து வந்தார். பின்னர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் கேபினெட் அமைச்சருக்கான அந்தஸ்தை பெற்றார். இதனால் அவருக்கு டைப் 8 பங்களா வழங்கவேண்டும். அதன்படி, சுனேரி பாக் சாலையில் பங்களா எண் ஐந்து அவருக்கு ஒதுக்கப்பட்டது. இது கர்நாடக பாஜ., தலைவர் ஏ.நாராயணசாமி வசித்து வந்த பங்களா. அவர், 2021 முதல் 2024 வரை மோடி அரசில் சமூக நீதித்துறை இணையமைச்சராக இருந்தார்.

ஒப்புதல்

ஆனால் அந்த பங்களாவில் குடியேற ராகுல் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், நேற்று தன் பிறந்தநாளையொட்டி, சில பொருட்கள் சுனேரி பாக் இல்லத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஜூலை 21ல் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், ராகுல் அந்த பங்களாவில் நிரந்தரமாக குடிபெயர்வார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venugopal, S
ஜூன் 21, 2025 09:13

ஏழை பங்காளி, எப்போது ஏழைகள் பற்றியே பேசிக் கொண்டு உள்ளவர்


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:48

ராகுல் கல்யாணம் ஆகாத ஒண்டிக்கட்டை.. அம்மாவுடன் இருக்கலாமே.


sankaranarayanan
ஜூன் 20, 2025 10:07

இந்த ஒண்டிக்கட்டைக்கு இவளவு பெரிய பங்களாவா டில்லியில் எத்தனை சிமாபுரி சுங்கிகளில் ஏழை மக்கள் படுக்கக்கூட இடமில்லாமல் தவிக்கிறார்கள் அவர்களில் ஒரு நூறு பேருக்கு இது போன்ற ஒரே ஒரே பங்களாவை கொடுங்கள் மந நிம்மதியுடன் வாழவார்கள் அரசும் நீடிக்கும்


Rajah
ஜூன் 20, 2025 10:05

69 க்கும் 19க்கும் உள்ள வித்தியாசம் என்ன?


திருட்டு அயோக்கிய திராவிடன்
ஜூன் 20, 2025 06:38

சகிக்கவில்லை.


naranam
ஜூன் 20, 2025 04:17

நிரந்தரமாக? அதெப்படி? MP பதவி மீண்டும் பறிபோகாதா? நேஷனல் ஹெரால்டு வழக்கு தான் வருகிறதே!


Kasimani Baskaran
ஜூன் 20, 2025 04:04

குடும்பம் இல்லாதவர்கள் பெற்றோரை கவனித்துக்கொண்டு பெற்றோருடன் வசிப்பதுதான் நம் கலாச்சாரம். தனி வீடு என்பதே தேவையற்றது - அரசு பணத்தை வீணடிப்பது.. எப்படியும் மோசடியில் உள்ளே போகப்போகிறவர்.. .


Rajan A
ஜூன் 20, 2025 03:22

மக்கள் வரி பணம் தானே? தண்ட செலவு