உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசார் மீது தாக்குதல்; ராகுல், பிரியங்கா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

போலீசார் மீது தாக்குதல்; ராகுல், பிரியங்கா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் இண்டி கூட்டணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். ராகுல், பிரியங்கா மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை தாக்கியது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.எஸ்ஐஆர் விவகாரம், ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க இண்டி கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 பேர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், 10 பேர் சந்திக்க அனுமதிக்க தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sudha
அக் 08, 2026 19:43

உச்ச நீதிமன்றத்தில் தினமும் இந்த வழக்கு நடைபெற்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆஜராக வேண்டும். தங்கள் வாதங்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நிஜமாகவே விஷயம் இருந்தால் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்


Prem Kumar Dhumal
அக் 08, 2026 16:28

தற்போது காங்கிரஸுக்கு முன்னால் உள்ள ஒரே சிறந்த தீர்வு என்னவென்றால், 2014-க்கு பிறகு தாங்களும் திருட்டு வாக்குகளால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, அந்த கட்சி மற்றும் இந்தியா கூட்டணியின் உள்ள அனைத்து எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடமும் மாநில சட்டமன்ற சபாநாயகர் களிடமும் தங்கள் ராஜினாமாக்களை சமர்ப்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு சாத்தியமானால், பின் தலைமை தேர்தல் ஆணையரிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற மோடி அரசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. காங்கிரஸ் தலைவர்கள் முன் வருவார்களா?


Thangavel Vel
அக் 08, 2026 15:51

ஜார்ஜ் சொரோஸ் வீட்டுக்கு அருகில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை அதிகரிங்க....


Arun, Chennai
அக் 08, 2026 18:38

True


Vasan
அக் 08, 2026 13:52

3 பிரிவுகளையும் சேர்த்து ஒரே வழக்காக பதிவு செய்யாதீர்கள், ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ஒரு வழக்கு என மொத்தம் 3 வழக்கு பதிவு செய்யுங்கள். ஏனெனில், ராகுலுக்கு ஒவ்வொரு வழக்கும் ஒரு பதக்கம். அவரிடம் தற்பொழுது 45 பதக்கங்கள் உள்ளனவாம். அவர் அரசியலை விட்டு விலகும் முன் 100 பதக்கங்கள் வாங்க விரும்புகிறார். இலக்கு விரைவில் அடைந்தால், விரைவில் அவர் ஒய்வு பெறுவார்.


SUBBU,MADURAI
அக் 08, 2026 13:28

இந்தியா இப்போது ஜார்ஜ் சோரோஸின் (Deep State) டீப் ஸ்டேட்டின் ஆட்சி மாற்ற நடவடிக்கையின் கீழ் அபாய கட்டத்தில் உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு எதிரியும் ஏன் ராகுல் காந்தியின் நண்பர்களாக இருக்கிறார்கள்? டீப் ஸ்டேட்டின் ஆதரவுடன் இந்தியாவின் சில பிரிவுகள், வங்கதேசம் மற்றும் நேபாளம் பாணியிலான ஒரு முழுமையான ஆட்சி மாற்ற நடவடிக்கையை இந்தியாவில் முயற்சிக்கும் என்பதற்கு OSINT இன் உறுதிப்படுத்தப்பட்ட அறிகுறிகள் தெரிகின்றன. 2008 ம் ஆண்டு ராகுல்காந்தி சீனாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, ​​சீனாவின் அதிபராக இருந்த Hu Jintao என்பவர் டீப் ஸ்டேட்டின் ஆளாவார். மார்ச் 2023 ல், ஜனநாயகத்தை மீட்டெடுக்க இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுமாறு நம் இத்தாலி இளவரசர் ராகுல்காந்தி அமெரிக்காவை மன்றாடி கேட்டுக்கொண்டார். ஜூன் 17, 2024 அன்று, டீப் ஸ்டேட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு ராகுல் காந்தி ஒரு பேட்டி அளித்தார். அதில், இந்த அரசாங்கம் தப்பிப்பிழைக்கப் போராடும் என்றும், ஒரு சிறிய சீர்குலைவு இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடும் என்றும் அவர் முழு நம்பிக்கையுடன் கூறினார். ராகுல் காந்தியின் இந்த நம்பிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி? குழப்ப நிபுணர் ஜார்ஜ் சோரோஸும், ஆட்சி மாற்ற நிபுணர்களான அமெரிக்க சிஐஏ வும் பல நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களில் ஈடுபட்டிருந்தனர். ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன் மற்றும் ஃபோர்டு ஃபவுண்டேஷன் ஆகியவை இந்தியாவில் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள், நடிகர்கள், எழுத்தாளர்கள், பெரும் நிறுவனத் தலைவர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மனிதவள வலையமைப்பை இப்போது நிறுவியுள்ளனர். இன்னும் சில நாட்களில் ராகுல்காந்தியின் போராட்டம் உக்கிரம் அடையும். பிரதமர் மோடி அதை எப்படி முறியடிக்கப் போகிறார் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்...


Prem Kumar
அக் 08, 2026 13:22

அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருக்க கூட அருகதை இல்லாத ஒருவரை மக்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் தேர்ந்தெடுத்ததற்கு அதன் தலைவர்கள் வெட்கப்படா விட்டாலும் மக்களிடையே கட்சி அவமானப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்பதை வருத்த்தோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.


பிரேம் குமார்
அக் 08, 2026 13:21

அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருக்க கூட அருகதை இல்லாத ஒருவரை மக்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் தேர்ந்தெடுத்ததற்கு அதன் தலைவர்கள் வெட்கப்படா விட்டாலும் மக்களிடையே கட்சி அவமானப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்பதை வருத்த்தோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 08, 2026 12:50

இந்த போலி காந்தியின் இரட்டை குடியுரிமை விசயத்தை உடனடியாக விசாரித்து இவனை நாட்டை விட்டு துரத்த வேண்டும். இந்துக்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளை செய்த இந்த போலி காந்தி குடும்ப கட்சிக்கு வோட் போடும் அறிவாளி இந்துக்கள் தான் திட்ட வேண்டும்.


Aarbinms
அக் 08, 2026 13:28

இதே பொழப்பா போச்சு. The best attack is always counter attack. என்னை யார் என்ன செய்து விட முடியும் என்ற திமிர் தான் காரணம். அப்படியே விட்டு விட்டால் நாட்டையே நாசம் பண்ணிடுவார்.


Kchandra Sekaran
அக் 08, 2026 12:49

Kchandra Sekaranகைது செய்யப்படும் அரசியல் தலைவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்க வேண்டும் அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டும். சாதாரண குற்றவாளிகள் எப்படி நடத்தப்படுவார்களோ அப்படியே இந்த அரசியல்வாதிகளும் நடத்தப்பட வேண்டும். காலையில் கைது மாலையில் விடுவிப்பு என்றால் இப்படித்தான் விளம்பரம் தேடுவார்கள். கூட்டத்தை கலைக்க தொடர்ந்து தினசரி தடியடி நடத்த வேண்டும். அதிலும் குறிப்பாக முக்கிய அரசியல் வாதிகள் மீது தடியடி ஒரு இரண்டு மூன்றுமுறை நடத்தப்பட்டால் பிறகு தேவையில்லாமல் விளம்பரம் தேடி அலையமாட்டார்கள்.. இவர்களெல்லாம் ஏதோ ஜனநாயகக் காவலர்கள் என மரியாதை கொடுத்தால் இப்படித்தான் அடாவடி செய்வார்கள்


சத்யநாராயணன்
அக் 08, 2026 12:40

இந்திய ராணுவ துறையில் தனியாக அவர்களுக்கு என்று ஒரு விசாரணை அமைப்பும் தண்டனை வழங்கும் அதிகாரமும் பெற்றிருப்பது போல தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் வெளிநாட்டு தீய சக்திகளின் ஆதரவுடன் கேடு செய்பவர்களை தண்டிப்பதற்கு தனியான விசாரணை அமைப்பும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் முழு அதிகாரமும் இருக்கும்படி ஏற்பாடு செய்வது மிக மிக அத்தியாவசியமானது இந்த பொதுவான நீதிமன்றங்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று இந்த கிரிமினல்களுக்கு நன்றாகவே தெரியும்


சமீபத்திய செய்தி