உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா செல்கிறார் ராகுல்; பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

அமெரிக்கா செல்கிறார் ராகுல்; பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

புதுடில்லி: அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செல்லும் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அங்குள்ள பல்கலைகளில் சர்வதேச அரசியல் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவரும், ராகுலுக்கு நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா நேற்று கூறியதாவது: ராகுலின் அமெரிக்க பயணத்தின்போது, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இம்மாதம் 17ல் கொலம்பியா பல்கலையில் நடைபெறும் கலந்துரையாடலில், உலகளவில் வளர்ந்து வரும் மாணவர் இயக்கங்கள் குறித்து அவர் பேச உள்ளார். மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான கோரிக்கைகள், ஜனநாயகத்தில் மாணவர் இயக்கங்களின் தாக்கம், இந்தியாவில் அவற்றின் நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.அடுத்ததாக, இம்மாதம் 18ல், சிகாகோ பல்கலையில், சர்வதேச அரசியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ராபர்ட் பேட் உடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சூழல், ஈரான் போர், உலக அரசியல் மாற்றங்கள் குறித்து இந்த விவாதம் அமையும். உள்நாட்டு பிரச்னைகளை ராகுல் வெளிநாடுகளில் எழுப்புவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது; இது, தவறான வாதம்.உலகின், 800 கோடி மக்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றனர். இதில் உள்ளூர் என்று எதுவுமே இல்லை. உள்ளூர் நிகழ்வுகள் உலகளாவிய நிகழ்வுகளாகவும், உலகளாவிய நிகழ்வுகள் உள்ளூர் நிகழ்வுகளாகவும் மாறுகின்றன. எனவே, தகவல்களை மறைத்து வைக்க முடியாது. இந்தியாவில் பேசும் ஒரு விஷயத்தை வெளிநாடுகளில் பேசலாம்.அங்கொன்றும், இங்கொன்றுமாக சொல்லக்கூடாது; அப்படி சொல்வது சரியாக இருக்காது. வெளிநாடுகளில் சென்று பேசுவது, இந்தியாவை அவமதிப்பதாக கருதப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது. சில கருத்துக்களை வெளிநாட்டில் கூறுவதால், 150 கோடி மக்கள் கொண்ட நாட்டை அவமதித்துவிட முடியாது.ஜனநாயகம், உலகின் பொதுச்சொத்து. உலக நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பது நம் தார்மீக பொறுப்பு. ராகுல் ஒரு இளம் தலைவர்; சர்வதேச தலைவரும் கூட. இதனால், வெளிநாடுகளுக்கு அவர் செல்வதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளிநாடுகளுக்கு சென்று, நம் நாட்டின் முக்கிய விஷயங்களை விவாதிப்பதாகவும், இந்தியா குறித்து அவதுாறாக பேசுவதாகவும் பா.ஜ., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி கட்சி மற்றும் மாணவர் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில், அமெரிக்காவில் இது தொடர்பான விவாதத்தில் ராகுல் பங்கேற்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

ManiK
நவ 12, 2026 20:15

கரப்பானின் உண்மையான தலைவரிடம் ஒரு கரையான் பயிற்சி எடுக்க போகின்றார். இந்த உலகத் தலைவர் அமெரிக்கா போய் தான் உளறல் தலைவர் என்று நிரூபிப்பார்.


Sridhar
நவ 12, 2026 14:52

நிச்சயமாக பிஜேபியுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை இல்லாமல் இவ்வாறு மாசத்துக்கு ஒருமுறை வெளிநாடு செல்வது என்பது இயலாத விஷயம். ஆனால், ஒன்றை பாராட்டியே தீரவேண்டும். யார் என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள், அவ்வளவு பெரிய தேசிய கட்சியே வீழ்ச்சி அடைந்தாலும் கவலையில்லை, எனக்கு என் ரகசிய பொண்டாட்டி புல்லிங்கோதான் முக்கியம்னு நினைக்கிற மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்??


Ramesh Sargam
நவ 12, 2026 14:37

அது கலந்துரையாடல் அல்ல. இந்தியாவை பற்றி கண்டதையும் கூறி அங்குள்ள மாணவர்களிடையே இந்தியா மீது வெறுப்புணர்வு ஏற்றுவார்


விஸ்வநாத் கும்பகோணம்
நவ 12, 2026 13:00

வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்ய துறை சார்ந்த அறிவும், பொதுவாக அறிவும் வேண்டுமே? இவர் அங்கு போய் என்ன பண்ண போகிறார்? காசு கொடுத்து கூட்டம் கூட்ட முடியாதே? இந்தியாவைப் பற்றி கேவலமாக பேசினால் அவருடைய பாஸ்போர்ட்டை நீக்க வேண்டும்.


Bharathi
நவ 12, 2026 12:54

இந்திய பாஸ்ப்போர்ட்ல அமெரிக்கா போயிட்டு அங்கிருந்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட்ல கொலம்பியா போவீங்களா? இல்ல அமெரிக்காவுக்கே வரவழைப்பீங்களா?


Saai sundaramurthy. A.V.K
நவ 12, 2026 12:49

டீப் ஸ்டேட் ஜனநாயக கட்சியினர் இதைத் தேர்தலில் ஜெயித்து விட்டார்கள். டீப் ஸ்டேட் ஜார்ஜ் சோரஸுக்கு சொல்லவா வேண்டும். உடனே தனது விசுவாசத்திற்கு உரிய ஏஜென்ட் ராகுல்காந்தியை கூப்பிட்டு, சாமரம் வீசி இந்தியாவுக்கு எதிராக அடுத்தகட்ட சதி திட்டம் குறித்து பேச அழைத்து விட்டார். கிளிப்பிள்ளை போல அதையே ராகுல்காந்தி இந்தியாவில் நடத்தப் போகிறார் என்பது தெரிகிறது.


manian
நவ 12, 2026 12:45

Another episode of India bashing and bad mouthing bjp Rss.Almost everymonth goes abroad.Govt should investigate truth behind foreign trips.Even the US Chinese Presidents do not travel like this.


கூத்தாடி வாக்கியம்
நவ 12, 2026 12:34

எந்த முட்டா பய இவர கூப்பிடறன்னு தெரியல.


KavikumarRam
நவ 12, 2026 12:24

கழுதை கெட்டா குட்டிச்சுவருன்னு இதைத்தான் சொன்னார்களோ.


Nagarajan D
நவ 12, 2026 11:32

பேசாம அங்கேயே இருந்துட்டு போகட்டும் பேசி யாருக்கு புரிய போகுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை